»   »  நாளை மெர்சல் இசை வெளியீடு... விஜய் பேசப் போகும் அரசியல் என்ன?

நாளை மெர்சல் இசை வெளியீடு... விஜய் பேசப் போகும் அரசியல் என்ன?

Posted By:
Subscribe to Oneindia Tamil

விஜய் நடித்த விரைவில் வெளி வரவிருக்கும் மெர்சல் படத்துக்கு ஏகத்துக்கும் எதிர்ப்பார்ப்பு உள்ளது. வெளியீட்டுக்கு முன்பே பல சாதனைகளைப் படைத்து வருகிறது அட்லீ இயக்கியுள்ள இந்தப் படம்.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவை மிகப் பிரமாண்டமாக நடத்துகிறார்கள். ஆகஸ்ட் 20-ம் தேதி, நாளை சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் இந்த இசை வெளியீட்டு விழா நடக்கிறது.


 Vijay to speak politics in Mersal audio launch?

இந்த விழாவுக்காக நேரு ஸ்டேடியத்தைத் தேர்ந்தெடுத்ததே விஜய்தானாம். ஆயிரக்கணக்கான தனது ரசிகர்களையும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைத்திருக்கிறாராம்.


விழாவில் முக்கிய அம்சமாக விஜய்யின் பேச்சு இருக்கும் என்கிறார்கள். காரணம், விஜய் இந்த விழாவில் அதிக நேரம் பேசவிருக்கிறாராம். தனது ரசிகர்களுடன் அவர் உரையாடும் நிகழ்வும் இருப்பதாகக் கூறப்படுகிறது.


சமீப நாட்களாக விவசாயிகள் பிரச்சினை, தமிழக அரசியல் குறித்தெல்லாம் சூசகமாகப் பேசி வரும் விஜய், இந்த விழாவில் வெளிப்படையாக சில விஷயங்களைப் பேசுவார் என்கிறார்கள்.

English summary
Sources say that Mersal audio launch's major highlight will be Vijay's speech, he is planning to talk about a few recent happenings in Tamil Nadu.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil