சித் ஸ்ரீராம், ஜொனிதா குரல்களில் வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிள்… விஜய் ரசிகர்களுக்கு தீபாவளி ட்ரீட் ரெடி
சென்னை: விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படம், அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகிறது.
தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இந்தப் படத்தை வம்ஷி பைடிபள்ளி இயக்குகிறார்.
இந்நிலையில், வாரிசு படத்தின் முதல் பாடல் தீபாவளிக்கு வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

விறுவிறுப்பான வாரிசு ஷூட்டிங் ஸ்பாட்
வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய்யின் 66வது படமாக உருவாகி வருகிறது 'வாரிசு.' தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் உருவாகும் இந்தப் படத்தில் ஏராளனமான முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். ஐதராபாத், சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் வாரிசு படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளதால், இறுதிக்கட்ட படப்பிடிப்பில் படக்குழுவினர் தீயாக வேலை செய்து வருகின்றனர்.

தீபாவளிக்கு வெளியாகும் ஃபர்ஸ்ட் சிங்கிள்?
வாரிசு திரைப்படம் மூலம் முதன்முறையாக விஜய்யுடன் கூட்டணி வைத்துள்ளார் இசையமைப்பாளர் தமன். இதனால், பாடல்கள் பட்டையைக் கிளப்பும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில், வாரிசு படத்தின் முதல் பாடல், தீபாவளிக்கு வெளியாகும் என சொல்லப்படுகிறது. இதுவரை வாரிசு திரைப்படத்தில் இருந்து விஜய்யின் போஸ்டர்கள் மட்டுமே வெளியாகியுள்ளது. இதனால், அடுத்து ஃபர்ஸ்ட் சிங்கிளை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

சித் ஸ்ரீராம், ஜொனிதா காந்தி குரல்களில் முதல் பாடல்
தமன் இசையில் வெளியாகவுள்ள வாரிசு படத்தின் முதல் பாடலுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்தப் பாடலை சித் ஸ்ரீராம், ஜொனிதா காந்தி இருவரும் இணைந்து பாடியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிள் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது குறித்து, விரைவில் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளதாகவும் தெரிகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் தீபாவளி ட்ரீட்டுக்காக வெயிட்டிங்கில் உள்ளனர். மேலும், வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிள் மெலடியா அல்லது டூயட் பாடலா அல்லது ஐட்டம் சாங் மாதிரி இருக்குமா? எனவும் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இனி அடுத்தடுத்து வாரிசு அப்டேட் தான்
வாரிசு படத்தை முடித்துவிட்டு விஜய் அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'தளபதி 67' படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தின் ஷூட்டிங் டிசம்பரில் தொடங்கும் எனக் கூறப்படுகிறது. அதனால், விரைவில் வாரிசு ஷூட்டிங் முடிவுக்கு வருவதோடு, அடுத்தடுத்து அந்தப் படத்தின் டீசர், ட்ரெய்லர் போன்றவை வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 'வாரிசு' படத்தின் அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகி, அது ரசிகர்களின் வெறித்தனமான எதிர்பார்ப்பை நிறைவேற்றுமா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications