»   »  ரசிகருக்கு செம சர்ப்ரைஸ் கொடுத்த நடிகர் விஜய்!

ரசிகருக்கு செம சர்ப்ரைஸ் கொடுத்த நடிகர் விஜய்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : கடந்த ஆண்டு, நடிகர் விஜய்யின் தீவிர ரசிகரான நிவாஸ் பானுசந்தர் விஜய் பற்றிய புத்தகத்தை 'தி ஐகான் ஆஃப் மில்லியன்ஸ்' எனும் பெயரில் எழுதினார். இந்த புத்தகம் விஜய் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

விஜய் ரசிகர் நிவாஸ் பானுசந்தர் விஜய்யின் சினிமா, தனித்துவம், சுவாரஸ்யமான தகவல்கள் உள்ளிட்டவைகளைக் கொண்டு எழுதிய 'தி ஐகான் ஆஃப் மில்லியன்ஸ்' புத்தகம் அமேஸான் விற்பனை தளத்தில் விற்றுத் தீர்ந்திருக்கிறது.

Vijay surprises his fan

இந்நிலையில் அந்தப் புத்தகத்தை எழுதிய ரசிகருக்கு நடிகர் விஜய் ஷாக் கொடுத்துள்ளார். இந்தத் தகவலை விஜய் ரசிகர் நிவாஸ் பானுசந்தர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

அமேசானில் இந்தப் புத்தகத்தை வெளியிட்டு விற்றுத் தீர்ந்ததற்குக் காரணம் விஜய் ரசிகர்கள்தான் என ட்விட்டரில் ஸ்டேட்டஸ் பதிவிட்டிருந்தார் நிவாஸ். அவருக்கு நடிகர் விஜய் போன் செய்து வாழ்த்துகளைத் தெரிவித்து, ஷாக் கொடுத்துள்ளார்.

இந்தப் புத்தகத்தை படிக்கும்போது தனக்கு நெகிழ்ச்சியாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார் விஜய். ரசிகரின் மகிழ்ச்சிக்காக போன் செய்து வாழ்த்திய விஜய்யை மற்ற விஜய் ரசிகர்களும் ட்விட்டரில் கொண்டாடி வருகிறார்கள்.

English summary
Last year, Nivas Banuchandar Vijay's fan wrote the book 'The Icon of Millions' about Vijay. This book was well received by Vijay fans. Actor Vijay called him surprisingly.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X