»   »  விஜய்-சமந்தாவின் 'தெறி'... குடும்பத்துடன் பார்க்கலாம்

விஜய்-சமந்தாவின் 'தெறி'... குடும்பத்துடன் பார்க்கலாம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் தெறி தணிக்கையில் 'யூ' சான்றிதழைக் கைப்பற்றியுள்ளது.

விஜய், சமந்தா, எமி ஜாக்சன், பிரபு, மகேந்திரன், பேபி நைனிகா என்று ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தெறி.


ஜி.வி.பிரகாஷ் இசையில் வெளியான இப்படத்தின் டிரெய்லர், பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.


Vijay's Theri Get U Certificate

ஆக்ஷன் பின்னணியில் உருவாகியிருக்கும் தெறியில், விஜய் பல்வேறு கெட்டப்புகளில் நடித்திருக்கிறார்.இதனால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


மிக அதிக பொருட்செலவில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு யூ சான்றிதழ் கிடைக்குமா? என்று அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.


இந்நிலையில் இப்படத்திற்கு யூ சான்றிதழ் கிடைத்திருப்பதாக இயக்குநர் அட்லீ தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.


மேலும் படத்திலிருந்து எந்தவித காட்சிகளையும் நீக்காமல், தணிக்கை அதிகாரிகள் இப்படத்திற்கு யூ சான்றிதழ் கொடுத்திருக்கின்றனர்.


தயாரிப்பாளர் தாணு அதிக பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்திருக்கிறார். வருகின்ற தமிழ்ப் புத்தாண்டில் தெறி உலகம் முழுவதும் வெளியாகிறது.


தலைவா,ஜில்லா, கத்தி, புலி, தெறி என்று வரிசையாக விஜய் படங்கள் 'யூ' சான்றிதழைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

English summary
Vijay-Atlee's Theri Get Clean 'U' Certificate From Censor Board.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil