Don't Miss!
- News
கர்நாடகாவில் பத்ரா மேலணை திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு.. தேர்தல் தேர்தல் என எதிர்க்கட்சிகள் கூச்சல்
- Technology
மலிவு விலையில் 28 நாட்கள் வேலிடிட்டி உடன் புதிய திட்டத்தை அறிமுகம் செய்து அதிரடி காட்டிய Vodafone Idea!
- Finance
மத்திய பட்ஜெட் 2023: மோடி அரசின் 7 முன்னுரிமைகள் - நிர்மலா சீதாராமன்
- Automobiles
இந்த மாதிரி டபுள்-டக்கர் பேருந்து எல்லாம் வந்தா நம்ம சென்னை வேற லெவல் ஆயிடும்!! அதுவும் எலக்ட்ரிக் தரத்தில்...
- Lifestyle
பட்ஜெட் 2023: இந்த ஆண்டு சிவப்பு நிற கைத்தறி புடவையில் பட்ஜெட் தாக்கல் செய்யும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
- Sports
2 தீராத குழப்பங்கள்.. நியூசி, உடனான 3வது டி20 போட்டி.. முடிவெடுக்க தடுமாறும் ஹர்திக் பாண்ட்யா!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பீஸ்ட் ஆடியோ வெளியீட்டு விழாவில் சம்பவம் இருக்கு.. ட்விட்டரை தெறிக்கவிடும் தளபதி ரசிகர்கள் #Vijay
சென்னை: மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் வருமான வரி தொடர்பான விசாரணை குறித்து நடிகர் விஜய் பேசிய நிலையில், பீஸ்ட் இசை வெளியீட்டு விழாவில் ரோல்ஸ் ராய்ஸ் கார் வழக்கு குறித்து தரமான சம்பவத்தை விஜய் செய்வார் என தளபதி ரசிகர்கள் #Vijay ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.
நடிகர் விஜய்யை தேச துரோகி போல சித்தரித்து தனி நீதிபதி வெளியிட்ட கருத்தை சென்னை உயர்நீதிமன்றம் நீக்க உத்தரவிட்டுள்ளது நடிகர் விஜய்க்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
நீதி நிச்சயம் வெல்லும் என்றும் எதிர்த்தால் அது தான் விஜய்யோட வளர்ச்சி என்றும் ரசிகர்கள் ட்வீட்களை தெறிக்கவிட்டு வருகின்றனர்.
ஒரு
மாப்பிள்ளையை
எடுத்தா
இன்னொரு
மாப்பிள்ளை
ஃப்ரீ
...
களைகட்டும்
ஈரமான
ரோஜாவே
புதிய
பிரமோ

விஜய்க்கு எதிரான கருத்து நீக்கம்
தளபதி விஜய்யை விமர்சித்த தனி நீதிபதியின் கருத்துகளை நீக்கியது ஐகோர்ட் என விஜய் ரசிகர்கள் ட்விட்டரை கொளுத்துங்கடா வெடிய என ட்வீட்களை குவித்து வருகின்றனர். ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் கார் இறக்குமதி செய்ததில் நுழைவு வரி செலுத்துவதற்கு எதிராக நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி சுப்பிரமணியம் நடிகர் விஜய்யை குற்றவாளி போல சித்தரித்ததற்கு எதிராக விஜய் மேல் முறையீடு செய்திருந்தார்.

தி பீஸ்ட்
ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் கார் வழக்கில் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களையும் தனக்கு எதிராக திணிக்கப்பட்ட எதிர்மறை கருத்துக்களையும் நீக்கிய தி பீஸ்ட் விஜய் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். விரைவில் பீஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளையும் இதற்கு ட்ரீட்டாக வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

ஒரு ரவுண்டு போலாமா
"சும்மா இருந்தா வாங்களேன்.. காரில் ஒரு ரவுண்டு போவோம்" என சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு வந்த பின்னர் விஜய் ரசிகர்கள் மீம்களை போட்டு விஜய்க்கு எதிராக எதிர்மறை கருத்துக்களை பரப்பியவர்களை கிண்டல் செய்து வருகின்றனர்.

எதிர்த்தா அதுதான் என்னோட வளர்ச்சி
சர்கார் படத்தில் நடிகர் விஜய் தனது ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரில் வந்து இறங்கும் போலாம் ரைட் பாடலில் இடம்பெற்ற "எதிர்த்தா அதுதான் என்னோட வளர்ச்சி" வரிகளையும் அந்த வீடியோவையும் ஷேர் செய்து விஜய் ரசிகர்கள் இணையத்தை கலக்கி வருகின்றனர்.

பீஸ்ட் ஆடியோ லாஞ்சில் சம்பவம்
பீஸ்ட் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சம்பவம் இருப்பதை உணர்கிறேன் என சூர்யாவின் ஏழாம் அறிவு போதி தர்மர் டெம்பிளேட்டை போட்டு வேறலெவல் மீம்களை உருவாக்கி உள்ளனர் விஜய் ரசிகர்கள். மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியதை போலவே பீஸ்ட் பட இசை வெளியீட்டு விழாவிலும் தளபதி விஜய் பேசுவதை கேட்க ரசிகர்கள் வெயிட்டிங்!