Don't Miss!
- News
"புடிங்க அவங்கள.." தமிழக இளைஞர்களை விரட்டியடித்த வடமாநிலத்தவர்! திருப்பூரில் உண்மையில் நடந்தது என்ன
- Sports
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 - இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன? பிட்ச் ரிப்போர்ட்
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Lifestyle
இந்த இந்திய மசாலா பொருட்கள் உங்க குடலுக்கு பல அதிசயங்களை செய்யுமாம்... அவை என்னென்ன தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
அச்சச்சோ.. குக் வித் கோமாளி மணிமேகலைக்கு என்ன ஆச்சு? இன்ஸ்டா பதிவால் டென்ஷனாகும் நெட்டிசன்ஸ்!
சென்னை: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மணிமேகலை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ள போஸ்ட்டை பார்த்த நெட்டிசன்கள் டென்ஷன் ஆகியுள்ளனர்.
சன்டிவி, சன் மியூஸிக் உள்ளிட்ட சேனல்களில் தொகுப்பாளினியாக இருந்தவர் மணிமேகலை.
சந்திரமுகி
2
வருமா
வராதா?
லாரன்ஸ்
சொன்ன
பதில்..
இன்றைய
டாப்
5
பீட்ஸில்!
விஜய் டிவியில் மிஸ்டர் அன்ட் மிசஸ் சின்னத்திரை, கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் சீசன் 2 ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

கோமாளிகள்
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற மணிமேகலை தற்போது குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார். மதுரை முத்து, ஷகிலா, தர்ஷா குப்தா, பாபா பாஸ்கர், கனி, தீபா, அஸ்வின், பவித்ரா லட்சுமி ஆகிய 8 பேர் குக்காகவும், புகழ், பாலா, சரத், சுனிதா, மணிமேகலை, ஷிவாங்கி உள்ளிட்டோர் கோமாளிகளாகவும் பங்கேற்றுள்ளனர்.

நகைச்சுவைக்கு பஞ்சமில்லாமல்
இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குக்குகளாலும் கோமாளிகளாலும் நகைச்சுவைக்கு பஞ்சமில்லாமல் செல்லும் இந்நிகழ்ச்சி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாகி வருகிறது.

மணிமேகலைக்கு விபத்து
இந்நிலையில் இந்நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்றுள்ள மணிமேகலை பதிவிட்டுள்ள இன்ஸ்டா பதிவு ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. அதாவது தான் விபத்தை சந்தித்ததாக பதிவிட்டுள்ளார் மணிமேகலை.

ஆஸ்பத்திரிக்கு போகாமல்..
அவர் பதிவிட்டிருப்பதாவது, ஆடி காரில் போவது வசதியான வாழ்க்கை இல்லை, ஆஸ்பத்திரிக்கு போகாமல் வாழ்வதே வசதியான வாழ்க்கை.. சமீபத்தில் படிச்சேன், நல்லா இருந்தது. எனக்கு சின்ன விபத்து நடந்தது. ஆனால் இப்போது எல்லாம் சரியாகிவிட்டது.

சுடு தண்ணி தூக்கும்போது
இரண்டு வாரங்களுக்கு குக் வித் கோமாளியையும் மற்ற சில நிகழ்ச்சிகளை ஒரு வாரத்திற்கும் மிஸ் பண்ணுவேன். ஒரு வாரத்தில் திரும்பி விடுவேன். உடம்பை கவனித்துக் கொள்ளுங்கள். பின்குறிப்பு: முக்கியமா சுடு தண்ணி தூக்கும்போது பாத்து தூக்குங்க! என பதிவிட்டுள்ளார்.

குணமாகி வாருங்கள்
மணிமேகலையின் இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள், என்ன விபத்து என்று கேட்டு வருவதோடு சீக்கிரம் குணமாகி வாருங்கள் என்றும் அக்கறையுடன் பதிவிட்டு வருகின்றனர்.