Just In
- 21 min ago
சனம் ஷெட்டியின் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. அவங்களே சொல்லியிருக்காங்க.. என்னன்னு பாருங்க!
- 43 min ago
'கே.ஜி.எஃப்' இயக்குனரின் 'சலார்' படத்தில் .. பிரபாஸூக்கு வில்லன் ஆகிறார், நடிகர் விஜய் சேதுபதி?
- 51 min ago
ஹிப்ஹாப் ஆதியின் "அன்பறிவு" படப்பிடிப்பு ஆரம்பம்!
- 1 hr ago
பிரம்மாண்ட அரங்கில் தொடங்கியது ‘கலியுகம்’ படப்பிடிப்பு.. ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
Don't Miss!
- News
கமலா மேடம்.. உங்களுக்காக சூடான புளியோதரை.. தெறிக்க விட்ட பத்மலட்சுமி!
- Sports
உண்மையிலேயே பெரிய வெற்றியாளர்... மலிங்காவை ரொம்ப மிஸ் செய்வோம்... ரோகித் சர்மா நெகிழ்ச்சி
- Automobiles
சுசுகி அக்செஸ் 125 ஸ்கூட்டரின் விலை உயர்ந்தன... எவ்வளவு உயர்ந்திருக்கு தெரிஞ்சா நிச்சயம் ஆச்சரியப்படுவீங்க!!
- Finance
தூள் கிளப்பிய பஜாஜ் ஆட்டோ.. லாபம் 23% அதிகரிப்பு.. செம ஏற்றத்தில் பங்கு விலை..!
- Lifestyle
ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளை ஏன் தவிா்க்க வேண்டும் என்பதற்கான காரணங்கள்!
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
விஜய் டிவி தீனாவுக்கு அடித்த ஜாக்பாட்... தனுஷ் தயாரிப்பில் ஹீரோவாகும் தீனா!

சென்னை : விஜய் டி.வி-யின் 'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்து பிரபலமானவர் தீனா.
இப்போதும் தொலைபேசியின் வழியாக விஜய் டி.வி-யின் முக்கிய விருந்தினர்கள் உள்பட அனைவரையும் கலாய்த்து வருகிறார் தீனா.
இந்த நிலையில் ஏற்கெனவே சில படங்களில் சிறிய கேரக்டர்களில் நடித்துள்ள தீனா தற்போது ஒரு புதிய படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார்.

ஹீரோவாக தீனா
மலையாளத்தில் சூப்பர் ஹிட் ஆன 'கட்டப்பனையிலே ரித்விக் ரோஷன்' என்ற படத்தின் தமிழ் ரீமேக்கை நடிகர் தனுஷ் தனது வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கவுள்ளார். இந்தப் படத்தில் விஜய் டிவி-யின் தீனா ஹீரோவாக நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

ஹீரோவாக தீனா
மலையாளத்தில் சூப்பர் ஹிட் ஆன 'கட்டப்பனையிலே ரித்விக் ரோஷன்' என்ற படத்தின் தமிழ் ரீமேக்கை நடிகர் தனுஷ் தனது வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கவுள்ளார். இந்தப் படத்தில் விஜய் டிவி-யின் தீனா ஹீரோவாக நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இன்னொரு படத்திலும்
இந்த படத்தில் நடிக்கவிருக்கும் மற்ற நட்சத்திரங்கள் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகவுள்ளதாகவும், இந்த படத்தை அடுத்து தனுஷ் தயாரிக்கும் இன்னொரு படத்திலும் தீனா நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கட்டப்பனையிலே ரித்விக் ரோஷன்
கடந்த 2016-ம் ஆண்டு மலையாளத்தில் புதுமுகங்கள் நடித்து வெளியான படம் 'கட்டப்பனையிலே ரித்விக் ரோஷன்'. நூறு நாட்கள் ஓடிய இந்தப்படத்தை மலையாள நடிகர் திலீப்பின் நண்பரான நாதிர்ஷா என்பவர் தான் இயக்கியிருந்தார்.

அஜித் ஃப்ரம் அருப்புக்கோட்டை
இந்தப்படத்தை தற்போது தமிழில் ரீமேக் செய்து தயாரிக்கும் வேலைகளில் இறங்கியுள்ளார் தனுஷ். தமிழிலும் நாதிர்ஷாவே இயக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப்படத்திற்கு 'அஜித் ஃப்ரம் அருப்புக்கோட்டை' எனும் டைட்டில் பரிசீலனையில் இருக்கிறதாம்.

தீனாவுக்கு யோகம்
விஜய் டி.வி-யின் தொகுப்பாளர்களையும், போட்டியாளர்களையும் கலாய்த்து கதறவிடும் தீனாவுக்கு தனுஷின் மூலமாக பெரும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. டைமிங் காமெடி சென்சில் பட்டையைக் கிளப்பும் தீனா நடிப்பிலும் தூள் கிளப்பினால் ரசிகர்களை வெகுவாகக் கவரலாம்.