»   »  சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் சாட்டிலைட் உரிமையை வாங்கிய விஜய் டிவி

சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் சாட்டிலைட் உரிமையை வாங்கிய விஜய் டிவி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் பட சாட்டிலைட் உரிமையை விஜய் டிவி வாங்கியுள்ளது.

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, சினேகா, ஃபஹத் ஃபாசில் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் வேலைக்காரன். அண்மையில் வேலைக்காரன் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.

24 ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். இந்நிலையில் படத்தின் சாட்டிலைட் உரிமத்தை விஜய் டிவி வாங்கியுள்ளது.

Vijay TV has bagged the satellite rights of Sivakarthikeyan starrer VELAIKKARAN

இது குறித்து விஜய் டிவியின் தலைவர் கிருஷ்ணன் குட்டி கூறியிருப்பதாவது,

சிவகார்த்திகேயன் மெகா ஸ்டாராக உருவாகியுள்ளதை பெருமையுடன் பார்த்து வருகிறோம். அவர் திறமைக்கு அவர் பெற்று வரும் வெற்றிகள் மிகப் பொருத்தமானது. அவரின் படங்கள் அனைத்து வயதினரையும் கவர்ந்து வருகின்றது.

வேலைக்காரன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கியதில் பெறுமைப்படுகிறோம். இந்த ஆண்டின் ஹிட் படங்களில் வேலைக்காரனும் ஒன்றாக இருக்கும் என்று நம்புகிறோம் என்றார்.

24ஏஎம் ஸ்டுடியோஸின் ஆர்.டி. ராஜா கூறும்போது, தனி ஒருவன் படம் மூலம் மோகன் ராஜா எங்களை கவர்ந்தார். அந்த மேஜிக் மீண்டும் நடக்கும் என்று நம்புகிறோம். மேலும் சிவகார்த்திகேயன், 24ஏஎம் ஸ்டுடியோஸ் மற்றும் விஜய் டிவி ஒரு குடும்பம் போன்று என்றார்.

வேலைக்காரன் படம் செப்டம்பர் மாதம் 29ம் தேதி ரிலீஸாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Vijay TV has bagged the satellite rights of Sivakarthikeyan starrer Velaikkaran being directed by Mohan Raja. The movie is set to hit the screens on september 29th.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil