காசேதான் கடவுளடா ரீமேக்கில் இணைந்த விஜய் டிவி பிரபலம்!
சென்னை : காசேதான் கடவுளடா திரைப்படத்தை இயக்குனர் ஆர் கண்ணன் ரீமேக் செய்ய உள்ளார்.
மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த், யோகி பாபு, ஊர்வசி, ஷிவாங்கி ஆகியோர் லீட் ரோலில் நடிக்கின்றனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமான புகழ் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

நகைச்சுவை
1972ம் ஆண்டு வெளியான நகைச்சுவைத் திரைப்படம் தான் காசேதான் கடவுளடா. இத்திரைப்படத்தில் லட்சுமி, மனோரமா, முத்துராமன், தேங்காய் சீனிவாசன், ஸ்ரீகாந்த், வெண்ணிற ஆடை மூர்த்தி என பல நட்சத்திரங்கள் நடித்திருப்பார்கள்.

இசை
இப்படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்து இருந்தார். இப்படத்தில் இடம் பெற்ற அனைத்துப்பாடல்களும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றன. குறிப்பாக ஜம்புலிங்கமே ஜடாதரா என்ற பட்டி தொட்டி எங்கும் பேசப்பட்ட பாடலாக இருந்தது.

சிவா , யோகி பாபு
இந்நிலையில், காசேதான் கடவுளடா திரைப்படத்தை ரீமேக் செய்யும் முயற்சியை இயக்குனர் ஆர் கண்ணன் கையில் எடுத்துள்ளார். முத்துராமன் கதாபாத்திரத்தில் மிர்ச்சி சிவாவும் அவருக்கு ஜோடியாக நடிகை பிரியா ஆனந்தும் நடிக்கின்றனர். யோகி பாபு, ஊர்வசி, சிவாங்கி நடிக்க உள்ளனர்.

புகழ் இணைந்தார்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமான புகழ் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் புகழ் கலந்து கொண்டார். வலிமை, சபாதி, விஜய்சேதுபதியின் படத்திலும் புகழ் நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











