Don't Miss!
- News
டெல்லிக்கு பறக்கும் ‘இன்புட்ஸ்’.. பல ஆங்கிள்கள்.. பின்வாங்கும் பாஜக? மூத்த பத்திரிகையாளர் ‘பளிச்’!
- Sports
உலக கோப்பை ஹாக்கி.. 3வது முறையாக ஜெர்மனி சாம்பியன்.. பரபரப்பான டிவிஸ்டில் நடந்த இறுதிப் போட்டி
- Finance
பிப்ரவரி மாதத்தில் தமிழகத்தில் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை?
- Automobiles
ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை இவ்ளோதானா! எப்புட்றா என மண்டையை சொறியும் போட்டி நிறுவனங்கள்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க பழச்சாறு குடிப்பவரா நீங்கள்? இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...!
- Technology
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
அப்பாவுடன் இருக்க ஆசைப்படும் லட்சுமி.. நிறைவேறுமா அவரது கனவு!
சென்னை : விஜய் டிவியின் முன்னணி தொடர்களில் ஒன்றாக உள்ளது பாரதி கண்ணம்மா.
இந்தத் தொடரில் தன்னுடைய குழந்தைகள் மற்றும் கண்ணம்மா குறித்த உண்மைகள் பாரதிக்கு தெரியவந்துள்ளது.
இதையடுத்து தொடரை முடித்துவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில், தற்போது தொடர் நீட்டிக்கப்பட்டு வருகிறது.
என் பொண்டாட்டி ஒரு தெய்வம்.. கதறலுடன் மன்னிப்பு கேட்ட பாரதி!

பாரதி கண்ணம்மா தொடர்
விஜய் டிவியின் முன்னணி தொடர்களில் ஒன்றாக பாரதி கண்ணம்மா தொடர் காணப்படுகிறது. இந்தத் தொடரில் கணவன் -மனைவிக்கு இடையில் ஏற்படும் சந்தேகம், அதை தொடர்ந்த பிரிவு மற்றும் வில்லியின் சூழ்ச்சி ஆகியவற்றை மையமாக கொண்டு காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால் இதையொட்டியே கதைக்களம் தொடர்ந்து இருந்ததால் ஒரு கட்டத்தில் சீரியல் ரசிகர்களுக்கு சலிப்பை கொடுத்தது.

ரசிகர்கள் கேள்வி
தொடர்ந்து சீரியல் எப்போது முடியும் என்று ரசிகர்களே கேட்கும் அளவிற்கு இந்த சீரியல் மாறியது. இதையடுத்து சுதாரித்துக் கொண்ட இயக்குநர், கதையில் ஒரு சில மாற்றங்களை கொண்டுவந்து சுவாரஸ்யமாக்கினார். ஆனாலும் சீக்கிரம் பாரதி மற்றும் கண்ணம்மாவை சேர்த்து வைத்து கதைக்கு எண்ட் கார்ட் போட வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக இருந்தது.

தொடரை நீட்டித்த இயக்குநர்
இதையடுத்து பாரதிக்கு, கண்ணம்மா மற்றும் தன்னுடைய குழந்தைகள் குறித்த உண்மையும் தெரியவந்தது. உண்மையை தெரிந்துக் கொண்ட பாரதி, கண்ணம்மாவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட சம்பவமும் நடைபெற்றது. இதை தொடர்ந்தாவது இருவரும் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென யாரிடமும் சொல்லாமல் தன்னுடைய தந்தையுடன் சொந்த ஊருக்கே வருகிறார் கண்ணம்மா.

புதிய களத்தில் பாரதி கண்ணம்மா தொடர்
இதையடுத்து அவர்களை தேடிக்கொண்டு பாரதியும், அந்த ஊருக்கு வருவதாக தற்போது கதை நீண்டுள்ளது. இதையடுத்து கதைக்கு எண்ட் கார்ட் போடும் எண்ணம் இயக்குநருக்கு இல்லை என்பது தெரியவருகிறது. தன்னுடைய இரண்டு குழந்தைகளுடன் கண்ணம்மா சிறிய சிறிய வேலைகளை செய்து வாழ்க்கையை நகர்த்துவதாகவும் உள்ளூர் நாட்டாமையின் மகன் அவரிடம் வம்பிழுப்பதாகவும் கதை தற்போது நகர்ந்து வருகிறது.

அப்பாவுடன் இருக்க விரும்பும் லட்சுமி
மேலும் கோர்ட் உத்தரவுபடி தன்னுடைய தந்தையுடன் வாரயிறுதியில் இருக்கும் லட்சுமி, அவருடனேயே தொடர்ந்து இருக்க விருப்பம் தெரிவித்து அழுது அடம் பிடிக்கிறார். இதையடுத்து அவரை சமாதானம் செய்யும் பாரதி, தானும் கண்ணம்மாவும் சேர வேண்டுமென்றால் லட்சுமி கண்ணம்மாவுடன்தான் இருக்க வேண்டும் என்பதையும் புரிய வைப்பதாக தற்போது புதிய ப்ரமோ வெளியாகியுள்ளது.