»   »  எனக்கு விஜய்யும், 'இந்த' நடிகரும் ஒன்று தான்: எஸ்.ஏ.சி.

எனக்கு விஜய்யும், 'இந்த' நடிகரும் ஒன்று தான்: எஸ்.ஏ.சி.

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: எனக்கு விஜய்யும் சரி, விஜய் ஆண்டனியும் சரி இரண்டுமே பேருமே ஒன்று தான் என இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் விஜய் ஆண்டனி, அருந்ததி நாயர் நடித்துள்ள சைத்தான் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. விழாவின்போது படத்தின் முதல் 5 நிமிட காட்சிகளும், ஒரு பாடலும் திரையிடப்பட்டது.

Vijay and Vijay Antony are same to me: SAC

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் பேசுகையில்,

சுக்ரன் படம் மூலம் இசையமைப்பாளர் ஆனவர் விஜய் ஆண்டனி. அப்போது அவரிடம் உங்களின் பெயர் என்ன என்று கேட்டதற்கு அக்னி என்றார். உங்களின் நிஜப் பெயர் விஜய் ஆண்டனியே நன்றாக உள்ளது. அந்த பெயரையே வைத்துக் கொள்ளலாமே என்றேன். அவரும் சம்மதித்தார்.

எனக்கு விஜய்யும், விஜய் ஆண்டனியும் ஒன்று தான். இரண்டு விஜய்களின் வளர்ச்சியும் எனக்கு ஒரே அளவு மகிழ்ச்சியை அளிக்கிறது. நான் பெயர் வைத்த பிள்ளைகள் சோடை போவது இல்லை என்றார்.

English summary
Director S.A. Chandrasekhar said that Vijay and Vijay Antony are same to him.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil