»   »  அட்லீயுடன் துபாய் சென்ற விஜய்: மெர்சல் 2 டிஸ்கஷனா? #Mersal2

அட்லீயுடன் துபாய் சென்ற விஜய்: மெர்சல் 2 டிஸ்கஷனா? #Mersal2

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய், இயக்குனர் அட்லீ, ஒளிப்பதிவாளர் விஷ்ணு ஆகியோர் துபாய் சென்றிருக்கிறார்கள்.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த மெர்சல் படம் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. இதையடுத்து விஜய் படக்குழுவுக்கு சிறப்பு பார்ட்டி கொடுத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இந்நிலையில் தான் விஜய் துபாய் சென்றுள்ளார்.

அட்லீ

அட்லீ

விஜய் தனியாக துபாய் செல்லவில்லை. அவருடன் அட்லீயும், மெர்சல் படத்தின் ஒளிப்பதிவாளர் விஷ்ணுவும் சென்றுள்ளனர். விஜய் கடற்கரையோரம் நின்று கொண்டிருந்ததை மக்கள் பார்த்துள்ளனர்.

அப்படியா?

அப்படியா?

மெர்சல் பட வெற்றியை கொண்டாடவே விஜய், அட்லீ, விஷ்ணு துபாய் சென்றார்களாம். ஆனால் மூன்று பேர் மட்டும் சென்றதால் மெர்சல் 2 படத்திற்கான டிஸ்கஷனோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

சினிமா

சினிமா

விஜய்யின் சினிமா வாழ்க்கையில் மெர்சல் தான் மெகா ஹிட் படம் என்கிறார்கள். அதனால் அவர் மீண்டும் அட்லீயுடன் கைகோர்க்கிறாரோ என்ற பேச்சு கிளம்பியுள்ளது.

விருப்பம்

விருப்பம்

விஜய், அட்லீ வெற்றிக் கூட்டணி மெர்சல் 2 படத்தில் சேர வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகிறார்கள். திரும்ப வர்றோம் தெறிக்க விடுறோம் என்று தங்களின் விருப்பத்தை ட்விட்டரில் தெரிவித்துள்ளனர் ரசிகர்கள்.

English summary
Vijay was seen in Dubai with Mersal director Atlee and DOP Vishnu. Is this trip for Mersal 2?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil