Don't Miss!
- News
"இங்கே வாங்களேன்".. பழ கருப்பையா பட்டென இப்படி முடிவெடுத்துட்டாரே.. உதயமானது இன்னொரு "கழகம்".. அடடே
- Technology
இந்தியாவில் கம்மி விலையில் 2 போன்களை இறக்கிவிடும் Motorola.! காத்திருப்போம்.!
- Sports
4 போட்டிகளில் விளையாட தடையா?.. இஷான் கிஷானுக்கு வந்த பெரும் சிக்கல்.. விளையாட்டு விணையானது எப்படி?
- Finance
ஊழியர்களை ஏன் பணி நீக்கம் செய்யுறீங்க..அப்படி செய்யாதீங்க.. அஷ்னீர் குரோவரின் பரிந்துரைய பாருங்க!
- Lifestyle
உங்க பிறந்த தேதி 2,11,20 மற்றும் 29 இதுல ஒன்னா? அப்ப உங்களுக்கு எப்படிப்பட்ட எதிர்காலம் காத்திருக்கு தெரியுமா?
- Automobiles
இந்த காருக்கு வெயில்தான் எரிபொருள்.. கரண்ட், பெட்ரோல், டீசல்னு எதுமே தேவையில்ல! காச சூப்பரா மிச்சப்படுத்தலாம்!
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
- Travel
உலகின் 7வது பழமையான நாடு இந்தியா – முதலிடத்தில் இருப்பது இந்த நாடா?
விஜய் vs அஜித்.. இந்த பொங்கலுக்கு பாக்ஸ் ஆபிஸை வெல்லப்போவது யார்? வசூல் மன்னன் யார்?
சென்னை: வீரம் vs ஜில்லா மோதலுக்கு பிறகு போட்டி வேண்டாம் என நினைத்து வந்த அஜித் மற்றும் விஜய் இந்த பொங்கலுக்கு நேரடியாக மோதி பார்த்து விடலாம் என்கிற முடிவுக்கே வந்து விட்டனர்.
இருவரது படங்களும் தனித்தனியாக வெளியாகி வரும் போதே ரசிகர்கள் சண்டை அதிகம் ஏற்பட்ட நிலையில், நேரடி மோதல் என்ன என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பது ஜனவரி 11ம் தேதி தெரிய வரும்.
இந்நிலையில், வாரிசு மற்றும் துணிவு படங்கள் மூலம் விஜய் மற்றும் அஜித் இருவரில் யார் பாக்ஸ் ஆபிஸ் மன்னன் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. மேலும், இரண்டு படங்களில் எந்த படம் அதிகம் வசூல் செய்யும் என்பதை லேசாக இங்கே அலசுவோம்..
வாரிசு
ட்ரெய்லர்
ரிலீஸ்..
பட்டாசு
வெடித்து
கொண்டாடிய
விஜய்
ரசிகர்கள்..
என்னவொரு
ரசிகர்
படை!

விஜய்யின் வாரிசு
இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஷாம், ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள வாரிசு திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 11ம் தேதி வெளியாகிறது. வாரிசு ட்ரெய்லர் வெளியாகி இதுவரை 20 மில்லியன் வியூஸ் கடந்து ட்ரெண்டாகி வருகிறது.

50 மில்லியன் வியூஸ்
இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் குமார், மஞ்சு வாரியர், சமுத்திரகனி, பிரேம் குமார், பக்ஸ், மோகன சுந்தரம் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள துணிவு படத்தின் ட்ரெய்லர் 50 மில்லியன் வியூஸ் கடந்து அதிரடி சாதனைகளை படைத்துள்ளது. வாரிசு ட்ரெய்லர் வெளியான நிலையில் கூட மீண்டும் அஜித் ரசிகர்கள் துணிவு ட்ரெய்லரை பார்த்து ட்ரெண்ட் செய்தனர்.

போட்டிக்கு ரெடி
ஜில்லா மற்றும் வீரம் படங்களுக்கு பிறகு நேரடி மோதலை தவிர்த்து வந்த நடிகர்கள் அஜித் மற்றும் விஜய் இந்த பொங்கலுக்கு மோதி பார்த்து விட ரெடியாகி விட்டனர். அஜித் ப்ரமோஷனுக்கு வரவில்லை என்றாலும் இயக்குநர் ஹெச். வினோத், மஞ்சு வாரியர் பெரியளவில் ப்ரமோஷன் செய்து வருகின்றனர். இந்த பக்கம் நடிகர் விஜய்யே களமிறங்கி வாரிசு இசை வெளியீட்டு விழா மூலம் பெரிய ப்ரமோஷன் செய்திருந்தார்.

சேம் டே ரிலீஸ்
இரண்டு படங்களில் ஒரு படம் ஒரு தேதி முன்னர் வெளியாகி வசூலை குவிக்கும் என எதிர்பார்த்த நிலையில், இரு படங்களும் வரும் ஜனவரி 11ம் தேதி ஒரே தேதியில் மோத உள்ளன. இதனால், இந்த முறை ரியல் பாக்ஸ் ஆபிஸ் கிங் யார் என்பது தெரிந்து விடும் என இரு தரப்பு ரசிகர்களும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

வசூல் மன்னன் யார்
ஆட்டநாயகன் என சொல்லிக் கொள்ளும் நடிகர் விஜய் வாரிசு படத்தின் மூலம் அதிக வசூலை அள்ளுவாரா? அல்லது என்ன மாதிரி அயோக்கிய பையன் மேல கை வைக்கலாமா என பஞ்ச் பேசிய நடிகர் அஜித் துணிவு படத்தின் மூலம் வசூல் மன்னனாக மாறுவாரா? என்பது ஜனவரி 12ம் தேதி தெரிந்து விடும்.

பாக்ஸ் ஆபிஸ் சாதகம் யாருக்கு
அஜித் மற்றும் விஜய் படங்கள் சுமாராக இருந்தாலே வசூல் அனல் பறக்கும் இரு படங்களும் ஒரு வேளை சூப்பராக அமைந்து விட்டால் மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட்டுக்கு வாய்ப்புகள் அதிகம் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் இரு படங்களும் சம அளவிலான திரையரங்குகளில் வெளியாகும் நிலையில், முதல் நாளில் இரு படங்களும் தலா 20 கோடி வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்தியளவில் மற்றும் ஓவர்சீஸ் வசூல் ரீதியாக துணிவு வசூலை முதல் நாளில் வாரிசு பின்னுக்குத் தள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. என்ன நடக்குதுன்னு வெயிட் பண்ணி பார்ப்போம்!