காலில் விழும் நிர்வாகிகள்..டென்ஷன் ஆன விஜய்...புஸ்ஸி ஆனந்திற்கு செம டோஸ்!
சென்னை : விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தின் காலில் நிர்வாகிகள் விழுந்த வீடியோ வெளியாகி பெரும் பேசுபொருளாகி உள்ளது.
நடிகர் விஜய் பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் வம்சி பைடிபைலி இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.
இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

வாரிசு
தமிழில் வாரிசு என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு தெலுங்கில் வாரிசுடு என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் அதிக திரையரங்குகளில் வெளியிட தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவிப்பதால் படத்திற்கு சிக்கல் எழுந்துள்ளது.

பனையூரில் சந்திப்பு
இந்த பிரச்சனை ஒரு பக்கம் பூதாகரமாகிக் கொண்டு இருக்க நேற்று முன்தினம் பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க தலைமை அலுவலகத்தில் விஜய் நிர்வாகிகளை சந்தித்து பேசினார். இதில், மக்கள் இயக்க செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்து அறிவுரைகளை விஜய் வழங்கியதாக கூறப்படுகிறது. இந்தச் சந்திப்பின்போது, ரசிகர்களுடன் விஜய் தனித்தனியாக புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

ரசிகர்களுக்கு அறிவுரை
ரசிகர்களுக்கு மதிய உணவாக பிரியாணி வழங்கப்பட்டுள்ளது. சுமார் 5 ஆண்டுகளுக்குப் பின்னர் ரசிகர்களை விஜய் சந்தித்துள்ளார். முதலில் குடும்பத்தைப் பாருங்க, உங்களால் முடிந்த உதவிகளை ஏழைகளுக்கு செய்யுங்கள், பால் அபிஷேகம் செய்ய வேண்டாம், நாளைய முதல்வர் என்ற போஸ்டர் வேண்டாம் என்று விஜய் கூறியுள்ளார்.

புஸ்ஸி ஆனந்திற்கு டோஸ்
இந்நிலையில் தற்போது இணையத்தில் விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தின் காலில் நிர்வாகிகள் விழும் வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோ நடிகர் விஜய்யின் கண்ணில் பட, டென்ஷனான விஜய், புஸ்ஸி ஆனந்தை நேரில் அழைத்து வார்னிங் கொடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











