twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆயிரம் அர்த்தங்களுடன் அசத்தல் குட்டிக்கதை.. கண்டிப்பா அரசியல் பேசுவார் விஜய்! ரசிகர்கள் நம்பிக்கை

    By
    |

    சென்னை: மாஸ்டர் பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் கண்டிப்பாக அரசியல் பேசுவார் என்று நம்புகிறார்கள், அவரது ரசிகர்கள்.

    பிகில் படத்தை தொடர்ந்து விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் விஜய் ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.

    வில்லனாக, விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். சாந்தனு பாக்யராஜ், ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் உட்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைத்துள்ளார்.

    ரசிகர்களுடன் செல்பி

    ரசிகர்களுடன் செல்பி

    சேவியர் பிரிட்டோவின் எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் நெய்வேலியில் நடந்தபோது விஜய்யிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தினர். பின்னர் அவரை வீட்டுக்கு அழைத்து விசாரணை நடத்தினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் நெய்வேலிக்கு படப்பிடிப்புக்குச் சென்ற விஜய்யை பார்க்க, திருவிழா போல ரசிகர்கள் கூடினர். அப்போது விஜய் ரசிகர்களுடன் எடுத்த செல்பி வைரலானது.

    குட்டி ஸ்டோரி

    குட்டி ஸ்டோரி

    இந்நிலையில், இந்தப் படத்தின் முதல் பாடலான குட்டி ஸ்டோரி காதலர் தினத்தன்று வெளியானது. விஜய் பாடிய, லெட் மி சிங் ஒரு குட்டி ஸ்டோரி என்று தொடங்கும் அந்தப் பாடல் வைரல் ஆனது. இந்நிலையில் விஜய் வீட்டில் நடந்த வருமான வரி சோதனை அனைத்தும் முடிந்து, விஜய் சரியாக வரி கட்டியுள்ளார் என்று இப்போது கூறி இருக்கிறது வருமானவரித்துறை.

    அரசியல் பேச்சு

    அரசியல் பேச்சு

    இந்த பரப்பரப்பான சூழலில்தான், இன்று நடக்கிறது மாஸ்டர் படத்தின் பாடல் வெளியீட்டு விழா. காவலனில் இருந்து அவரது ஒவ்வொரு படங்களும் பிரச்னையை சந்தித்து இருக்கின்றன. அதில் எல்லாம் அமைதி காத்து வந்த விஜய், மெர்சலில் அரசியல் பேச்சை ஆரம்பித்து வைத்தார். டிஜிட்டல் இந்தியாவை விமர்சித்ததற்காக அந்தப் படத்தை எதிர்த்திருந்தது பாஜக.

    பூக்கடை, பட்டாசு கடை

    பூக்கடை, பட்டாசு கடை

    'சர்காரி'ல் இலவச மிக்ஸி, கிரைண்டரை எறியும் காட்சி சர்ச்சையானது. ஆளும் கட்சியினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். அடுத்து 'பிகில்' படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் 'யாரை எங்கு உட்கார வைக்க வேண்டுமோ...' என்று ஆரம்பித்து அவர் சொன்ன பூக்கடை, பட்டாசு கடை கதை ஆளுங்கட்சியினரை டென்ஷனாக்கியது. அமைச்சர்கள், விமர்சித்தார்கள். இந்த விழாவை நடத்த எப்படி அனுமதி அளித்தீர்கள்? என்று கேட்டு, விழா நடந்த கல்லூரிக்கு நோட்டீஸ் அனுப்பியது, அரசு.

    அரசியல் நிச்சயம்

    அரசியல் நிச்சயம்

    இதையடுத்து இன்று, மாஸ்டர் ஆடியோ விழா. இந்த விழாவை மட்டும் விஜய், விட்டு விட்டுவிடுவாரா என்ன? 'கண்டிப்பாக விஜய் அரசியல் பேசுவார். வருமான வரி துறை ரெய்டு தொடர்பாக சில கருத்துக்களை மனம் திறந்து பேசுவார். அதில் அரசியல் நிச்சயம் இருக்கும் என்கிறார்கள் அவருக்கு நெருங்கியவர்கள். இதையேதான் அவர் ரசிகர்களும் சொல்கிறார்கள். அசத்தலான குட்டிக்கதையை, ஆயிரம் அர்த்தங்களுடன் தளபதி சொல்வார் என்று ஆணித்தரமாக நம்புகிறார்கள் அவர்கள். பேசுவாரா பார்ப்போம்!

    English summary
    Vijay fans believes that Vijay would speak politics in Master audio launch
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X