விஜய் செய்த தவறுகள்.. விஜயகாந்தை குறிப்பிட்டு தொடர்ந்து பாடம் எடுக்கும் ப்ளூ சட்டை மாறன்!
சென்னை: நடிகர் விஜய்க்கு ஆதரவாக கருத்துக்களை வெளியிட்டு வந்த ப்ளூ சட்டை மாறன், தற்போது விஜயகாந்த் போல ஆளுமை திறமை விஜய்யிடம் இல்லை என்றும் கரூர் சம்பவத்துக்கு முக்கிய காரணமே விஜய் தரப்பிடம் உள்ள சில குறைகள் தான் என்றும் விஜய் செய்த தவறுகள் என ஒரு பெரிய லிஸ்ட்டே போட்டுள்ளார்.
கரூரில் தவெக சார்பில் நடைபெற்ற ரோடு ஷோவில் கடந்த சனிக்கிழமை மக்களை விஜய் சந்தித்த போது, இரவு நேரத்தில் பலர் மூச்சுத் திணறி மயங்கி விழுந்ததும், கூட்ட நெரிசல் ஏற்பட்டு பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் என 41 பேர் பலியானது ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கி எடுத்துள்ளது.

தமிழ்நாட்டை ஆளப்போகிறேன் என்கிற முழக்கத்துடன் விஜய் அரசியல் களத்தில் குதித்துள்ள நிலையில், அவரால் ஒரு ரோடு ஷோவை கூட நடத்த முடியவில்லையே? இவர் எப்படி தமிழ்நாட்டை ஆள்வார், நாளைக்கே ஒரு பெரிய கலவரம் வந்தால், மற்றவர்களை மட்டுமே குறை சொல்லிக் கொண்டிருப்பாரே என பலரும் கடுமையாக கண்டித்து வரும் நிலையில், விஜய் செய்த தவறுகளை பட்டியலிட்டுள்ளார் ப்ளூ சட்டை மாறன்.
விஜய் செய்த தவறுகள்:
* மரம், மின்சார கம்பிகள், கட்டடங்கள் என அனைத்திலும் சகட்டுமேனிக்கு ஏறும் ரசிகர்களை.. கட்டுப்படுத்துவதில் தொடர்ந்து தோற்பது.
* விழுப்புரம் மாநாடு நடந்த நேரத்தில்.. இறந்த தொண்டர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறாதது.
* வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்காமல்.. பனையூர் ஆபீஸ்க்கு வர வைத்தது.
* மீடியாவை ஒருமுறை கூட சந்திக்காமல் தொடர்ந்து தவிர்த்து வருவது.
* மொக்கையான நபர்களை ஆலோசகர்களாக வைத்திருப்பது.
* தவெகவில் இருப்பவர்களில் 95% பேர் ரசிகர்களாக மட்டுமே. பொறுப்புள்ள தொண்டர்களாக மாறவில்லை என்பதை உணராதது.
இவற்றுக்கெல்லாம் முன்மாதிரியாக..
* கோயம்பேடு ரோகிணி தியேட்டர் இருக்கைகள் அனைத்தையும் உங்கள் ரசிகர்கள் நாசம் செய்தபோது.. அதை கண்டிக்காமல் அமைதி காத்தது. அந்த பாதிப்பிற்கு நஷ்ட ஈடு தராதது.
* FDFS நள்ளிரவு காட்சிகளின்போது அசம்பாவிதம் நடக்க வாய்ப்புண்டு என உணர்ந்து.. தயாரிப்பாளர்/விநியோகஸ்தர்களிடம் பேசி.. காலைக்காட்சிகள் மட்டுமே போதுமென கூறாதது.
* ப்ளாக்கில் டிக்கட் விற்பனை நடக்கும்போது... என் ரசிகர்கள் யாரும் ப்ளாக் டிக்கட் வாங்க வேண்டாம். அரசு நிர்ணயித்த ரேட்டில் மட்டுமே வாங்குங்கள் என அறிவுறுத்தாதது.
*இந்த சினிமா சார்ந்த விதிமீறல்களுக்கு.. ஒரு கண்டனம் கூட தெரிவிக்காமலும், ரசிகர்களை முறைப்படுத்தாமலும்.. வேடிக்கை பார்த்ததன் பலன்.. அரசியல் கட்சி ஆரம்பித்த பிறகு அனுபவிக்க வேண்டியுள்ளது.
'இன்னும் ஸ்ட்ராங் ஆக நம் அரசியல் பயணம் தொடரும்' என உங்கள் ரசிகர்களுக்கு செய்தி கூறியுள்ளீர்கள்.
அவர்களை ஒழுங்குபடுத்தாதவரை... தவெக தேர் முன்னோக்கி நகர வாய்ப்பில்லை." என ப்ளூ சட்டை மாறன் பதிவிட்டுள்ளார்.
விஜயகாந்த்திடம் கற்றுக்கொள்ள வேண்டியவை:
'டேய்.. கீழ எறங்குடா. எதுக்கு அங்க தொங்கிட்டு இருக்க? அவனை எறக்கி விடுங்கய்யா' என நாக்கை துருத்தி கேப்டன் ஒரு சவுண்ட் விட்டால்... அடுத்த நிமிடம் அந்த தொண்டர் இறங்கி விடுவார் அல்லது இறக்கி விடப்படுவார்.
Command, ஆளுமைத்திறன் இருப்பதால்தான் அவர்.. கேப்டன்.
ஆர்வக்கோளாறு தொண்டர்களை ஸ்பாட்டில் கண்ட்ரோல் செய்து விட்ட பிறகுதான்.. மீண்டும் மைக்கில் பேச்சை தொடர்வார்.
இது விஜய் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய பாடங்களில் ஒன்று." என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











