»   »  தற்போதுள்ள நிலையை பார்த்தால், விஜய் அரசியலுக்கு வரவே வேண்டாம்: எஸ்.ஏ.சி.

தற்போதுள்ள நிலையை பார்த்தால், விஜய் அரசியலுக்கு வரவே வேண்டாம்: எஸ்.ஏ.சி.

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தற்போதுள்ள மோசமான அரசியல் சூழலை பார்த்தால் என் மகன் விஜய் அரசியலுக்கு வருவதை நான் விரும்பவில்லை. விஜய் அரசியலுக்கு வர மாட்டார் என்று இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

ஆளும் கட்சியான அதிமுக சசிகலா அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி என இரண்டாக உடைந்துவிட்டது. இரு அணிக்காரர்கள் பிரச்சனையால் இரட்டை இலை சின்னம் கூட முடக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இளைய தளபதி விஜய் அரசியலுக்க வருவது பற்றி அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் கூறியிருப்பதாவது,

ஆர்.கே. நகர் தேர்தல்

ஆர்.கே. நகர் தேர்தல்

நடக்கவிருக்கும் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் எனது மகனின் விஜய் மக்கள் இயக்கம் யாருக்கும் ஆதரவு அளிக்காது என்பதை தெளிவுபடுத்திக்கொள்கிறேன்.

அரசியல்

அரசியல்

தற்போதுள்ள மோசமான அரசியல் சூழலை பார்த்தால் என் மகன் விஜய் அரசியலுக்கு வருவதை நான் விரும்பவில்லை. விஜய் அரசியலுக்கு வர மாட்டார் என்றார் எஸ்.ஏ.சி.

எஸ்.ஏ.சி.

எஸ்.ஏ.சி.

விஜய் அரசியலுக்கு வந்து மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என தான் விரும்புவதாக எஸ்.ஏ. சந்திரசேகர் முன்பு தெரிவித்திருந்தார். மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ள நடிகர்களால் தான் அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என நம்பியவர் எஸ்.ஏ.சி.

விஜய்

விஜய்

விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் விஜய் 61 படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் நடக்க உள்ளது.

English summary
Director cum actor SAC has said that considering the bad political scenario, he doesn't want his son Vijay to enter politics.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil