»   »  இளையதளபதி விஜய்யுடன் 'நெருப்புடா' கூட்டணி

இளையதளபதி விஜய்யுடன் 'நெருப்புடா' கூட்டணி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கபாலி பட இயக்குனர் பா. ரஞ்சித்துடன் சேர்ந்து பணியாற்ற விரும்புகிறாராம் இளைய தளபதி விஜய்.

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி படம் பல சாதனைகளை படைத்தது தான் போதும் கோலிவுட்டின் முன்னணி நடிகர்கள் ரஞ்சித்தின் இயக்கத்தில் நடிக்க விரும்புகிறார்கள். இதற்கு இளைய தளபதி விஜய்யும் விதிவிலக்கு அல்ல.

ரஞ்சித் கபாலியை அடுத்து சூர்யாவை வைத்து ஒரு படத்தை இயக்குகிறார். ரஞ்சித், சூர்யா கூட்டணி உறுதியாகிவிட்டது. இந்நிலையில் தான் ரஞ்சித்துடன் சேர்ந்து பணியாற்ற விஜய் விரும்புவது தெரிய வந்துள்ளது.

Vijay to work with 'Neruppuda' team

விஜய் நடிப்பில் வெளியாகி ஹிட்டான தெறி படத்தை தயாரித்தவர் கபாலி பட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தான். தாணு ரஞ்சித்தை வைத்து மீண்டும் ஒரு படத்தை தயாரிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் விஜய், ரஞ்சித் கூட்டணி சேர்ந்தால் அந்த படத்தை தாணு தயாரிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

English summary
Vijay is reportedly wishing to work with Kabali director Ranjith. It is told that if this happens, Kabali producer will help them make the movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil