»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

தமிழ்த் திரைப்பட நடிகர் சங்கத் தலைவராக நடிகர் விஜய்காந்தும், செயலாளராக நடிகர் சரத்குமாரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

சினிமா நடிகர்-நடிகைகளுக்கான தென்னிந்திய நடிகர் சங்கம் சென்னையில் உள்ளது. நடிகர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க வரும் 9 ம் தேதிதேர்தல் நடக்கிறது.

நடிகர் சங்கத்தில் தலைவர் பதவிக்கு நடிகர் விஜயகாந்த் மனுத்தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து 4 பேர் மனுத்தாக்கல் செய்தனர். அதே போல் செயலாளர்பதவிக்கு நடிகர் சரத்குமார் மனுத்தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து 2 பேர் மனுத்தாக்கல் செய்தார்.

சனிக்கிழமை வேட்புமனுவை வாபஸ் வாங்கக் கடைசி நாள். இந்த இரு நடிகர்களையும் எதிர்த்து மனுத்தாக்கல் செய்த அனைவரும் சனிக்கிழமை வாபஸ்பெற்றனர். நடிகர் சங்கத் தலைவராக நடிகர் விஜயகாந்தும், செயலாளராக சரத்குமாரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் தென்னிந்திய திரைப்பட சங்கத்தின் சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

"ஒற்றுமையே முக்கியம்

தேர்வுக்குப் பின் விஜயகாந்த் கூறுகையில், நான் முதலில் நடிகர் நடிகைகளுக்குள் ஒற்றுமையை ஏற்படுத்துவேன். நாங்கள் இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டதுதிரையுலகில் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது. நலிவடைந்த கலைஞர்கள் அனைவரின் வாழ்க்கையும் முன்னேறவழிவகுப்பேன் என்றார்.

சரத்குமார் பேசுகையில், திரைப்பட சங்கத்தின் தலைவராக விஜயகாந்த் தேர்ந்தெடுக்கப்பட்டது திரையுலகிற்குக் கிடைத்த வரப்பிரசாதம்.

அவர் தலைமையில் திரையுலகில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும். தலைவர் எவ்வழியோ அவ்வழியே என் வழியே.

விலகினார் ராதிகா:

நடிகை ராதிகா துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார். தற்போது அவர் தனது மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டார். நடிகை ராதிகா இலங்கையில்இருப்பதால் அவர் சார்பில் அவரது மேலாளர் கண்ணதாசன் வந்து மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டார்.

தலைவர், செயலாளர் பதவி தவிர துணைத் தலைவர், பொருளாளர், உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் வரும் 9 ம் தேதி நடக்கிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil