»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

கீதை என்ற பெயரை தனது படத்துக்கு வைக்க நடிகர் விஜய்க்கு என்ன யோக்கியதை இருக்கிறது என இந்து முன்னணித் தலைவர்ராம.கோபாலன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நக்கீரன் வார இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:

கீதை இந்துக்களின் புனித நூல். சுவாமி விவேகானந்தர் முதல் கவியரசு கண்ணதாசன் வரை கீதையின் மகத்துவத்தை உலகறியச் சொல்லிஇருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட கீதையின் பெயரில் படம் எடுக்க விஜய் என்ற நடிகனுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது. கீதை என்ற பெயர் வைத்ததுமேஅதற்கு அனுமதி தரக் கூடாது என சென்சார் போர்டிடம் கோரிக்கை வைத்தேன். போர்ட் அனுமதி தராது என்று நம்பினேன், ஆனால்,சென்சார் போர்டும் ஏமாற்றிவிட்டது.

படத்தின் பெயர் புதிய கீதையாம். அப்படின்னா பழைய கீதையைவிட இது உசந்ததுன்னு அர்த்தம் சொல்கிறார்களா?. ஒரு நடிகையின்நெஞ்சின் மீது அந்த விஜய் கையை வச்சுருக்காப்ல சீன் வருது. அப்ப அதன் நடுவுல கீதைனு பெயர் போட்டு போஸ்டர் அடிச்சிருக்காங்க.இதுக்கு எவ்வளவு திமிர் இருக்கனும்.

அந்த விஜய் சினிமாவுல அவுத்துப் போட்டு ஆடட்டும். நடிகைகள் கூட ஓடட்டும். ஆனால், கீதை பெயரை ஏன் வைக்கனும்.

இது போதாதுன்னு கிருஷ்ண பரமாத்மா மூஞ்சியிலேயே விஜய் படத்தை ஒட்டி வச்சுருக்காங்க. இது கேவலமா இல்லை?. போஸ்டரைஒட்டுனவனை அரெஸ்ட் பண்ணனும்னு கோரிக்கை வச்சுருக்கோம். இதுக்கு விஜய்யும் தயாரிப்பாளரும் உடந்தை.

இவனுங்க என்ன செஞ்சாலும் அமைதியா இருக்கனும்னு நினைக்கிறானுக. அடிதடி கலவரம் வரனும். பஸ் உடையனும். அது மூலமாபப்ளிசிட்டி வரனும் நினைக்கிறானுக. நாங்க பஸ்ஸை எல்லாம் உடைக்க மாட்டோம். வன்முறையில ஈடுபட மாட்டோம்.

இந்த போஸ்டரை எதிர்த்து குரல் கொடுத்தா அதுக்குப் போட்டியா ஆறிலும் சாவு, நூறிலும் சாவு, தளபதியை எதிர்த்தே இன்றே சாவுன்னுபோஸ்டர் ஒட்டுறானுகன்னா எவ்வளவு கொழுப்பு இருக்கனும்.

கீதை படத்துக்கு அப்புறம் என் பையன் எங்கேயோ போகப் போறான்னு விஜய்யோட அப்பா சொன்னாராம். நீ படமா எடுத்துத் தள்ளு.இனி எல்லாமே டப்பாவுக்குத் தான் போகும்.

படத்தை பார்த்துட்டு அப்புறம் பேசுங்க சார்னு ஒருத்தன் என்கிட்டயே சொன்னான். அந்தப் படத்துல அமிர்தமே வழிஞ்சாலும் சரி. கீதைன்னுபெயர் வரக் கூடாது. சாமி போஸ்டர்ல விஜய் மூஞ்சி வரக் கூடாது. இதை இந்து அமைப்புகள் எதிர்க்க வேண்டும்.

இவ்வாறு ராம.கோபாலன் கூறியுள்ளார். (விஜய்யை அவன், இவன் என்றே ராமகோபாலன் குறிப்பிட்டார். அதைநக்கீரனும் நாமும் தவிர்த்துள்ளோம்)

இது இப்படி இருக்க, விஜய்யை கிருஸ்துவர் என்று கூறி பிரச்சனையை மத மோதல்களுக்கு எடுத்துச் செல்லும் செயல்களிலும் சிலர்ஈடுபட்டுள்ளனர்.

  • கீதைன்னு தலைப்பு.. விஜய்க்கு என்ன யோக்கியதை இருக்கு: ராம கோபாலன்
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil