»   »  மீண்டும் வெளியான 'தளபதி 62' போட்டோ... டென்ஷனில் படக்குழு!

மீண்டும் வெளியான 'தளபதி 62' போட்டோ... டென்ஷனில் படக்குழு!

Posted By:
Subscribe to Oneindia Tamil
வைரயிலாகும் விஜய் 62 போட்டோ!

சென்னை : விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் சில நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. சென்னையில் ஷூட்டிங் முடித்து, மும்பைக்குச் சென்ற படக்குழு அங்கு சில காட்சிகளை மட்டும் எடுத்துவிட்டு மீண்டும் சென்னை வந்தது.

விஜய்யை வைத்து 'துப்பாக்கி', 'கத்தி' ஆகிய படங்களை இயக்கிய முருகதாஸ், தற்போது விஜய்யை இயக்கி வருகிறார். துப்பாக்கி படத்தில் ராணுவ வீரரைப்பற்றிய கதையை படமாக்கிய முருகதாஸ், கத்தியில் விவசாயிகள் பிரச்னையை படமாக்கினார். 'விஜய் 62' படத்திலும் விவசாயிகள் மற்றும் மீனவர்களின் பிரச்னை பேசப்படுகிறதாம்.
விஜய்யின் 62-வது படமான இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இப்படத்திற்கு எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுதுகிறார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

Vijay62 shooting spot photo goes viral

'விஜய் 62' படம் வரும் தீபாவளிக்கு வெளிவர இருப்பதால் பட வேலைகள் மிகவும் வேகமாக நடைபெற்று வருகிறது. எவ்வளவு தான் ரகசியமாக சில விஷயங்களை வைத்திருந்தாலும் எப்படியாவது லீக் ஆகிவிடுகிறது.

இப்படத்தின் ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்பு விஜய்யின் போட்டோ ஷூட் வீடியோ, புகைப்படம் ஆகியவை சமூக வலைதளங்களில் லீக்கானது. இந்நிலையில் தற்போது புதிய புகைப்படம் ஒன்று எப்படியோ வெளியாகியுள்ளது.

இதில் விஜய் கருப்பு நிற கோட் ஷூட் போட்டு, கண்ணாடி அணிந்து மிகவும் ஸ்டைலாக இருக்கிறார். இந்த படம் தான் தற்போதைய லேட்டஸ்ட் வைரல். யாரோ மறைவாக இந்த போட்டோவை எடுத்துள்ளது தெரிகிறது. விஜய் ரசிகர்கள் இந்தப் புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர்.

Read more about: vijay vijay62 விஜய்
English summary
Actor Vijay's latest shooting spot photo goes viral on social networks.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil