»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

அரசியல் கட்சிகளில் இருப்பவர்கள் சினிமாவில் எந்த ஒரு அமைப்பிலுமோ பதவியிலுமோ இருக்கக் கூடாதுஎன்று நடிகர் விஜயகாந்த் கூறினார்.

நடிகர் சங்க தலைவர் விஜயகாந்த் அளித்த பேட்டி விவரம்:

தமிழகத்திற்கு நீர் தர மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து தமிழ் திரையுலகம் சார்பில் நெய்வேலியில்பிரம்மாண்டமான அளவில் போராட்டம் நடத்தினோம்.

அதைப் பார்த்த பிறகு தான் காவிரிப் பிரச்சனையில் தமிழர்கள் ஒற்றுமையாக இருந்தால் நியாயமானதேவைகளைப் பெற முடியும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது.

என்னுடைய ரசிகர் மன்றங்கள் ஏராளமான நற்பணிகளையும் சமூக சேவைகளையும் செய்து வருகின்றன.

ஆனால் ரசிகர் மன்றத்திற்கு என்று தனிக் கொடி ஒன்றை உருவாக்கியவுடன் நான் அரசியலுக்கு வரப் போவதாகவதந்திகள் பரவ ஆரம்பித்தன.

இருந்தாலும் நான் ஒரு நடிகனாக இருப்பதிலேயே மகிழ்ச்சி அடைகிறேன். மக்கள் விரும்பும் வரை தொடர்ந்துநடித்துக் கொண்டே இருப்பேன். ஹாலிவுட்டில் கிளின்ட் ஈஸ்ட்வுட் என்ற நடிகர் தன்னுடைய 72வது வயதில் கூடகதாநாயகனாக நடித்தார்.

கலையுலகைச் சேர்ந்தவர்கள் அனைவருமே அரசியலுக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

அதேபோல் எந்த ஒரு அரசியல் கட்சியிலும் உறுப்பினர்களாக இருப்பவர்கள், சினிமாவில் உள்ளஅமைப்புகளிலோ அதன் பதவிகளிலோ இருக்கக் கூடாது என்றார் விஜயகாந்த்.

திமுகவைச் சேர்ந்த எம்.பியான நடிகர் சரத்குமார் நடிகர் சங்கத்தின் செயலாளராக உள்ளார் என்பதுகுறிப்பிடத்தக்கது.

இது போலவே நெப்போலியன், எஸ்.எஸ். சந்திரன் உள்ளிட்ட மேலும் சில நடிகர்களும் கூட பல்வேறு கட்சிகளில்இருந்து கொண்டே நடிகர் சங்க அமைப்புகளிலும் முக்கியப் பதவிகளில் இருந்து வருகிறார்கள்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil