Just In
- 24 min ago
இன்னும் முடியாத கிராண்ட் ஃபினாலே ஷூட்டிங்.. டைட்டில் வின்னர் அறிவிப்பை தாமதப்படுத்துவது ஏன்?
- 45 min ago
ஆரி, பாலா, ரம்யா, ரியோ, சோம்.. செம சூப்பரா இருக்காங்களே.. இறுதிப்போட்டியில் பங்கேற்ற குடும்பங்கள்!
- 1 hr ago
அனிதாவோட அப்பாவுக்கு என்னை ரொம்ப பிடிக்குமாம்.. கமலிடம் நெகிழ்ந்த ஆரி.. என்ன சொன்னார் பாருங்க!
- 1 hr ago
சில வருட காதல்.. ஓகே சொன்ன குடும்பம்.. துபாய் காதலரை மணக்கும் பிரபல சீரியல் நடிகை.. பரவும் தகவல்!
Don't Miss!
- Sports
கடும் மோதல்.. ஒரு கோல் கூட அடிக்காத மும்பை சிட்டி - ஹைதராபாத்!
- News
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். 104-வது பிறந்த நாள்.. ட்விட்டரில் பிரதமர் மோடி புகழ் வணக்கம்
- Finance
அதிரடி ஆஃபர்.. ரூ.877 ரூபாயில் விமானத்தில் போகலாம்.. இண்டிகோவின் சரவெடி சலுகை..!
- Automobiles
வாகனத்தில் தனியாக செல்லும்போது மாஸ்க் அணிவது கட்டாயமா, இல்லையா? - மத்திய அரசு விளக்கம்
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Lifestyle
வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ராம நாராயணன் மறைவு தமிழ்த் திரையுலகிற்கு பேரிழப்பு: விஜயகாந்த்
டெல்லி: இயக்குநர் ராம நாராயணன் மறைவு தமிழ்த் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய திரையுலக வெற்றிக்கு அவரின் பங்கு மகத்தானது எனவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
"தமிழ்த் திரையுலகின் ஜாம்பவானும், எனது பெரும் மரியாதைக்குரிய இயக்குநருமான ராம நாராயணன் அவர்கள் உடல்நலக் குறைவால் சிங்கப்பூர் மருத்துவமனையில் காலமானார் என்ற செய்தியினை கேட்டு, பெரும் அதிர்ச்சியும், மிகுந்த வேதனையும் அடைந்தேன். இச்செய்தி என்னை மீளாத் துயரில் ஆழ்த்தியுள்ளது.

ராம நாராயணன் இயக்கத்தில் 10-க்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்களில் நான் நடித்துள்ளேன். என்னுடைய திரையுலக வெற்றிக்கு அவரின் பங்கு மகத்தானது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, மராத்தி, குஜராத்தி, வங்காளம், ஒரியா, போஜ்புரி, மலாய் ஆகிய மொழிகளில் 125 படங்களுக்கும் மேல் இயக்கியுள்ளார்.
பல படங்களை அவரே தயாரித்தும் உள்ளார். பாடலாசிரியராகவும், கதாசிரியராகவும் இருந்து, இயக்குநர், தயாரிப்பாளர் என உயர்ந்தவர். இவரின் சாதனை தமிழ்த் திரையுலக வரலாற்றில் ஒரு மைல் கல்லாகும்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராக 3 முறையும், தமிழக அரசின் இயல், இசை, நாடக மன்றத் தலைவராக 2 முறையும், சட்டமன்றப் பேரவை உறுப்பினராகவும் பதவி வகித்தவர். தமிழக அரசின் கலைமாமணி விருது உட்பட பல்வேறு விருதுகளை பெற்றவர்.
பழகுவதற்கும், நட்பு பாராட்டுவதற்கும் இனிமையானவர், எளிமையானவர். சிறந்த பண்பாளர். இப்படி எல்லா வகையிலும் சிறப்பு பெற்ற எனது ஆருயிர் நண்பர் ராம நாராயணன் அவர்களின் இழப்பு எனக்கு மட்டுமல்ல, அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், இந்திய திரையுலகிற்கும், குறிப்பாக தமிழ்த் திரையுலகிற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
அவரை இழந்து வாடும் அனைவருக்கும் தேமுதிக சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்ளுகிறேன். அவருடைய ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்". இவ்வாறு விஜயகாந்த் தனது இரங்கல் குறிப்பில் தெரிவித்துள்ளார்.