»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

நடிகர் சம்பளம் தொடர்பாக லேப் லெட்டர் முறையை ஏற்க முடியாது என்று விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை அதிர்ச்சி தருகிறது. நடிகர் சங்கம் நல்லமுடிவு தெரிவிக்க வேண்டும் என்று பட அதிபர்கள் சங்கம் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் அ.செ. இப்ராஹிம் ராவுத்தர் வியாழக்கிழமை ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் கூறப்பட்டுள்ளவிவரம் வருமாறு:

சமீபத்தில் வெளியிடப்பட்ட தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த் அறிக்கை கண்டு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், பல பிரச்சனைகளுக்குமத்தியில் போராடிக் கொண்டிருக்கும் தமிழ் படத் தயாரிப்பாளர்களும் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தயாரிப்பாளர்கள் சார்பில் வைக்கப்பட்ட பத்துக்கும் மேற்பட்ட கோரிக்கைகளில் சில கோரிக்கைகளை மட்டுமே (அதுவும் அடிப்படை கோரிக்கைகள்அல்லாத துணை கோரிக்கைகளை மட்டும்) ஏற்றுக் கொண்டு விட்டார்கள்

பின்னர் நாங்கள் தான் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டு விட்டோமே படப்பிடிப்புகளை ஆரம்பிக்க வேண்டியது தானே என்று அவர்கள் பத்திரிகைகளில்ஆதங்கப்பட்டிருப்பதைப் பார்க்கும் பொழுது தயாரிப்பாளர்களின் இன்றைய மோசமான நிலைமையை நடிகர், சங்க நிர்வாகிகளுக்கு சரியாக எடுத்துரைக்க நாம்தவறி விட்டோமோ என்ற ஐயப்பாடுதான் தயாரிப்பாளர்களுக்கு ஏற்படுகிறது.

இப்பொழுது மீண்டும் எங்களது அடிப்படை கோரிக்கையை தெரிவித்துக் கொள்வது எங்கள் கடமை என்று கருதுகிறோம். தயாரிப்பாளர்களின் பிரதானகோரிக்கை லேப் லெட்டர் கோரிக்கைதான்.

அதுவும் ஏதோ வீண் பிடிவாதத்திற்காகவோ அல்லது நாங்கள் சொல்லி விட்டோம் அதை நடிகர் சங்கத்தினர் ஏற்றுக் கொண்டாக வேண்டும்என்பதற்காகவோ அல்ல. இந்த லேப் லெட்டர் கோரிக்கை நிறைவேறினால் மட்டுமே பல படத் தயாரிப்பாளர்கள் படம் எடுக்க முடியும் என்றசூழ்நிலை இன்று பட உலகில் இருந்து வருகிறது.

தவிர ஆண்டுக்கு நூற்றி இருபது படங்களிலிருந்து இன்று நாற்பது படங்களாக சுருங்கி இருக்கும் தமிழ் படங்கள் எண்ணிக்கை மீண்டும் நூறை தொட வேண்டுமானால்அதற்கு இந்த ஏற்பாடுதான் வழிவகுக்கும்.

அந்த அடிப்படை உண்மையின் காரணமாகவே இந்த கோரிக்கையில் ஊன்று நிற்க வேண்டிய கட்டாயம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. மருத்துவர் நோயைக்குணப்படுத்த மருந்து கொடுத்து விட்டு கூடவே இரண்டு நாட்கள் ஓய்வு எடுங்கள் பிறகு எல்லாம் சரியாகி விடும் என்பார்.

மருத்துவருடைய எண்ணம் நடமாடிக் கொண்டிருப்பவனை படுக்கைக்கு தள்ளுவது அல்ல. காலம் பூராவும் அவன் நோய் நொடியின்றி நடமாட வேண்டுமானால்மருந்து மட்டும் போதாது நடைறை வாழ்க்கையில் சில கட்டுப்பாடுகளும் தேவை என்பதை அவர் அறிவார்.

புதிய படங்களை ஆரம்பிக்க கூடாது என்ற சுய கட்டுப்பாட்டில் தமிழ்த் திரையுலகம் இன்று செயல்படுவதும் தமிழ் திரையுலகமும், அதனைச் சார்ந்ததொழிலாளர்களும் காலம் பூராவும் பணியாற்றுவதற்குரிய ஆரோக்கியத்தை அவர்களுக்கு தருவதற்காக தரப்பட்டுள்ள மருத்துவரீதியானஓய்வுதான்.

சினிமா தோன்றிய நாளிலிருந்து இன்று வரை திரைப்படத் தயாரிப்பாளர்கள் பலமுனைப் பிரச்சனைகளால் இந்த அளவிற்கு எப்பொழுதுமேபாதிக்கப்பட்டதில்லை என்பது மறுக்கவே முடியாத உண்மை.

ஆகவே அன்பு கூர்ந்து திரை உலகம் தயாரிப்பாளர்களும் பயன் பெறத்தக்க வகையில் ஒரு நல்ல தீர்வினை நடிகர் சங்கத் தலைவர் அவர்களது சங்கஉறுப்பினர்களோடு கலந்து பேசி அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு இப்ராஹிம் ராவுத்தர் தனது அறிக்கையில்குறிப்பிட்டுள்ளார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil