»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

இன்றைக்குப் போல நாளையும் இருக்குமா என்பது உறுதியில்லை. எனவே முடிந்தவரை சம்பாதித்துக் கொள்ளவேண்டும் என்று நடிகர்களுக்கு விஜயகாந்த் ஆலோசனை கூறியுள்ளார்.

சின்னத்திரை நடிகர் சங்கம் என்ற பெயரில் டிவி நடிகர்களுக்கான சங்கம் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது.இதற்கான விழாவில் நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது, வேலைப்பளு அதிகமாக இருப்பதாக சில டிவி நடிகர்கள் என்னிடம் கூறினார்கள். அப்படிக் கூறக்கூடாது. நான் ஒரு காலத்தில் ஒரு வருடத்தில் 18 படம் கூட நடித்திருக்கிறேன். சோம்பேறித்தனம் பார்க்காமல்,முடிந்தவரை சம்பாதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

இன்றைக்குப் போல நாளை இருக்காது. எனவே வருகிற வாய்ப்புகளைத் தட்டி விடாமல் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். என்னைப் பொருத்தவரை சிறிய நடிகர், பெரிய நடிகர் என்று யாரையும் பாகுபடுத்திப் பார்ப்பதில்லை.

சின்னத் திரை மீது எனக்கு எந்தவித காழ்ப்புணர்ச்சியும் இல்லை. ஆனால் சினிமா நடிகர்களை, டிவிக்களில்கடுமையாக விமர்சித்து நிகழ்ச்சிகள் வருகின்றன. இது ஆரோக்கியமானதல்ல. தயவு செய்து எங்களைக் கேலிசெய்யாதீர்கள் என்றார் அவர்.

நடிகர் ராதாரவியும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். சங்கத் தலைவராக நடிகர் வசந்த்தும், பொதுச் செயலாளராகநடிகர் ராஜேந்திரனும் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டார்கள்.

Please Wait while comments are loading...