»   »  லேட்டானாலும் லேட்டஸ்ட்டா வந்து பாகுபலி 2-வை பாராட்டிய விஜயகாந்த்

லேட்டானாலும் லேட்டஸ்ட்டா வந்து பாகுபலி 2-வை பாராட்டிய விஜயகாந்த்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பாகுபலி படம் இந்திய சினிமாவின் அடையாளம் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் பாராட்டியுள்ளார்.

ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா உள்ளிட்டோர் நடித்த பாகுபலி 2 படம் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸானது. கட்சி வேலைகளில் பிசியாக இருந்தாலும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் படத்தை பார்த்துள்ளார்.

Vijayakanth praises Baahubali 2

படம் குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

இந்திய திரைப்படத்தை உலகத் திரைப்படத்திற்கு இணையாக கொண்டு சென்ற மாபெரும் வெற்றி திரைப்படம் பாகுபலி. பண்டைய கால இந்திய கலாச்சாரத்தை, பெருமையை, வாழ்க்கை முறையை மிக நேர்த்தியாக படமாக்கிய விதம் மிகவும் வரவேற்கத்தக்கது.

உலகிலுள்ள அனைத்து மக்களாலும் வரவேற்கும் படமாக, மாபெரும் வெற்றிப்படமாக ஆக்க, உழைத்த இயக்குனர் திரு. எஸ்.எஸ். ராஜமௌலிக்கும், படத்தில் பங்காற்றிய அனைத்து கலைஞர்களுக்கும் எனது வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பாகுபலி இந்திய சினிமாவின் அடையாளம் என்பது அனைவருக்கும் பெருமை சேர்க்கும் படமாக உள்ளது, மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

வாழ்த்துக்கள் ராஜமவுலி என அவர் தெரிவித்துள்ளார்.

English summary
DMDK chief Vijayakanth took to twitter to praise SS Rajamouli's magnum opus Baahubali 2 calling it as Indian cinema's identification.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil