Don't Miss!
- Finance
வேலை வாய்ப்பினை அதிகம் உருவாக்கும் துறைகளில் PLI கவனம் செலுத்தலாம்.. பட்ஜெட்டில் எதிர்பார்ப்பு!
- News
தேசிய ஜனநாயக முற்போக்கு பணிமனை.. புதிய பெயர் வைத்த எடப்பாடி.. அப்போ பாஜக? என்னங்க இது.. குழப்புதே!
- Technology
BSNL சூப்பர் ரீசார்ஜ்: மாதம் ரூ.184 தான் செலவு 395 நாளுக்கு வேலிடிட்டி.! மாஸ் ஆன பிளான் இதான்.!
- Automobiles
ஃப்ரீனாலும் இந்த 5 ரயில்கள்ல மட்டும் போயிடாதீங்க... போனவங்க எல்லாம் கழுவி கழுவி ஊத்துறாங்க!
- Sports
2 தீராத குழப்பங்கள்.. நியூசி, உடனான 3வது டி20 போட்டி.. முடிவெடுக்க தடுமாறும் ஹர்திக் பாண்ட்யா!
- Lifestyle
பிப்ரவரி மாதம் இந்த 4 ராசிக்காரர்கள துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி அடிக்கப்போகுதாம்... ஜாக்கிரதையா இருங்க...!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய விஜயகாந்த்.. நலமுடன் இருப்பதாக தகவல்!
சென்னை : நடிகரும் அரசியல் தலைவருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.
நீரிழிவு நோய் காரணமாக அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
அவர் உடல் நலம் தேற திரைத்துறை பிரபலங்கள், ரசிகர்கள் பிரார்த்தனை மேற்கொண்டனர்.
நான் குண்டா இருக்கேன்னு கேவலமா பேசினாங்க.. டிப்ரஷன்ல இருந்தேன்.. கொட்டித் தீர்த்த அபர்ணா பாலமுரளி!

உடல்நலம் பாதித்த விஜயகாந்த்
நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டு பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்தார். கடந்த சட்டசபை தேர்தலிலும் அவர் பங்கேற்கவில்லை. கட்சிப் பணிகளை அவரது மனைவி பிரேமலதா விஜய்காந்த் கவனித்து வருகிறார்.

மருத்துவமனையில் அனுமதி
அவரது உடல்நலத்தில் மிகுந்த அக்கறை மற்றும் கவனத்துடன் அவரது குடும்பத்தினர் பார்த்து வருகின்றனர். உடல்நலக்குறைவு காரணமாக கட்சி அலுவலகத்திற்குகூட செல்லாமல் வீட்டிலேயே சிறப்பான சிகிச்சை மற்றும் ஓய்வை அவர் பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.

ரசிகர்கள் பிரார்த்தனை
அவர் திடீரென மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது திரைத்துறையினர் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் விரைவில் உடல்நலம் தேறி வீடு திரும்ப வேண்டும் என அனைவரும் பிரார்த்தனை மேற்கொண்டனர். இதனிடையே, அவருக்கு நீரிழிவு காரணமாக வலது காலில் 3 விரல்கள் அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

வீடு திரும்பினார் விஜயகாந்த்
அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது சிகிச்சை முடிந்து அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார். அவர் தற்போது நலமாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து ஓய்வில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ள நிலையில் அவர் தொடர்ந்து ஓய்வில் இருப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆக்ஷன் படங்கள்
விஜயகாந்த் சிறப்பான பல படங்களில் நடித்துள்ளார். ஆரம்பத்தில் சாதாரண கதைகளில் நடித்திருந்த இவர், தொடர்ந்து சிறப்பான பல கதைகளில் நடித்துள்ளார். இவர் பறந்து பறந்து ஆக்ஷன் காட்டிய படங்கள் இவருக்கு மிகப்பெரிய பெயரையும் வரவேற்பையும் ரசிகர்களிடையே பெற்றுத் தந்தன.

சமூக கருத்துக்கள்
இவை ஒருபுறம் இருக்க ரமணா போன்ற சமூக கருத்துடைய படங்களிலும் விஜயகாந்த் நடித்துள்ளார். இந்தப் படங்களின்மூலம் சமூக விழிப்புணர்வையும் தன்னுடைய படங்களில் தந்துள்ளார். இந்தப் படங்கள் இவரின் அரசியல் பிரவேசத்திற்கான சிறப்பான கதவுகளை திறந்து விட்டன.

உடல்நலம் பாதிப்பு
அரசியலிலும் சிறப்பாக செய்லபட்டு வந்தார் விஜய்காந்த். சூறாவளி சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு தனது கட்சிக்கு சிறப்பான வரவேற்பை தேடித் தந்தார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை பாதிக்கப்பட்டு முற்றிலும் ஓய்வில் உள்ளார். இவர் மீண்டும் பொதுவெளியில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதே இவரது ரசிகர்களின் விருப்பமாக உள்ளது,.