»   »  விஜயகாந்தை பார்க்க மருத்துவமனைக்கு வந்தபோது அண்ணன் மகன் மாரடைப்பால் மரணம்

விஜயகாந்தை பார்க்க மருத்துவமனைக்கு வந்தபோது அண்ணன் மகன் மாரடைப்பால் மரணம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தின் அண்ணன் மகன் நரசிம்மன் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் அண்ணன் மகன் நரசிம்மன்(49). சிறு வயதிலேயே தந்தையை இழந்த நரசிம்மன் சித்தப்பா விஜயகாந்தின் பராமரிப்பில் தான் வளர்ந்தார்.

Vijayakanth's nephew no more

சித்தப்பா வழியில் திரைத்துறைக்கும் சென்றார். விஜயகாந்தின் பல படங்களுக்கு சி.ஜி. பணிகள் செய்துள்ளார் நரசிம்மன். மேலும் ஜீன்ஸ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படையப்பா படங்களுக்கு விஷுவல் எஃபெக்ட்ஸ் சூப்பர்வைஸராகவும் இருந்துள்ளார்.

விஜயகாந்த் கடந்த 10 நாட்களாக மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சித்தப்பாவை பார்க்க மருத்துவமனைக்கு சென்ற இடத்தில் நரசிம்மனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிர் இழந்தார்.

இந்த சம்பவத்தால் விஜயகாந்த் கவலையில் உள்ளார்.

English summary
DMDK chief Vijayakanth's nephew Narasimhan died of cardiac arrest on march 31.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil