»   »  அப்பாவின் ‘மன்னிப்பை’ பட்டி பார்த்து... சகாப்தம் படத்தில் புது பன்ச்சாக மாற்றிய "வைஸ் கேப்டன்"!

அப்பாவின் ‘மன்னிப்பை’ பட்டி பார்த்து... சகாப்தம் படத்தில் புது பன்ச்சாக மாற்றிய "வைஸ் கேப்டன்"!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்தின் இளையமகன் சண்முக பாண்டியன். சகாப்தம் படம் மூலம் ஹீரோவாகி இருக்கிறார் இவர்.

மகனை ஹீரோவாக நிலை நிறுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் விஜயகாந்த். இப்படத்தில் அவர் ஒரு சண்டைக்காட்சியில் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

வீடு முழுக்க சகாப்தம் பட போஸ்டர்கள், பொதுக்கூட்டத்தில் கூட சகாப்தம் பேச்சு என எப்போதும் மகன் பட நியாபகமாகவே இருக்கிறார் விஜயகாந்த்.

பஞ்ச் வசனங்கள்...

பஞ்ச் வசனங்கள்...

விஜயகாந்தின் பஞ்ச வசனங்கள் மிகவும் பிரபலமானவை. அதேபோல், தனது அறிமுகப் படத்திலும் சண்முகப் பாண்டியன் தந்தையைப் போலவே பஞ்ச் ஒன்றைப் பேசி இருக்கிறாராம்.

மன்னிப்பு...

மன்னிப்பு...

விஜயகாந்திற்கு மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்த படம் ரமணா. இப்படத்தில் ‘தமிழ்ல எனக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்பு' என பஞ்ச் பேசியிருப்பார் கேப்டன்.

சகாப்தம் பஞ்ச்...

சகாப்தம் பஞ்ச்...

தற்போது அந்த பஞ்சை லைட்டாக டிங்கரிங் பார்த்து மகன் சண்முகபாண்டியனின் சகாப்தத்தில் பயன் படுத்தியிருக்கிறார்களாம்.

பரம்பரைக்கே பிடிக்காது...

பரம்பரைக்கே பிடிக்காது...

அதாவது, ‘மன்னிப்பு... என் பரம்பரைக்கே பிடிக்காத வார்த்தைடா'னு சண்முகப் பாண்டியன் பஞ்ச் பேசுகிறாராம். இது தவிர இப்படத்தில் சண்முகப் பாண்டியன் வேறு எதுவும் பஞ்ச் பேசவில்லையாம்.

English summary
The DMDK president Vijayakanth's son Shanmuga Pandian has a punch dialogue in his debut film Sagaptham
Please Wait while comments are loading...