»   »  மிஸ் இந்தியா, மிஸ் பெங்களூருடன் நம்ம விருகம்பாக்கம் சண்முகம்!

மிஸ் இந்தியா, மிஸ் பெங்களூருடன் நம்ம விருகம்பாக்கம் சண்முகம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன் ஹீரோவாக அறிமுகமாகும் ‘சகாப்தம்‘ படத்தில் மிஸ் இந்தியா, மிஸ் பெங்களூர் என இரண்டு அழகிகளுடன் கலக்கலான குத்தாட்டம் போட்டுள்ளார்.

ஆக்சன், ரொமான்ஸ் ஹீரோவாக சண்முகபாண்டியன் நடித்திருக்கும் இந்த படத்தை சுரேந்திரன் இயக்கியுள்ளார். காதலர் தினத்தன்று சகாப்தம் படம் ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரண்டு அழகிகள்

இரண்டு அழகிகள்

சகாப்தம் படத்தில் 2010 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா இன்டர்நேஷனல் பட்டம் வென்ற நேஹா ஹிங் ஹீரோயினாக நடிக்கிறார். புதுமுகம் சுரபா 2வது ஹீரோயினாக நடிக்கிறார் இவர் மிஸ் பெங்களூர் அழகியாம்.

பவர்ஸ்டார்

பவர்ஸ்டார்

இப்படத்தில் தேவயானி, ரஞ்சித், சிங்கம்புலி, ஜெகன், பவர் ஸ்டார் சீனிவாசன், ராஜேந்திரநாத், சண்முகராஜன், 'பன்னீர் புஷ்பங்கள்' சுரேஷ், 'தலைவாசல்' விஜய் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.வில்லனாக சௌரவ் எனும் மும்பை நடிகர் தமிழில் அறிமுகமாகிறார்.

அனல் பறக்கும் சண்டைகள்

அனல் பறக்கும் சண்டைகள்

மலேசியாவில் பட்டாயா பகுதியில் சாமுராய் வாள் சண்டை போட்டு பட்டையை கிளப்பியுள்ளாராம் சண்முக பாண்டியன். இதையடுத்து, தாய்லாந்தில் நடுக்கடலில் தாய் ஸ்டண்ட் டைரக்டர் கெச்சா, ஸ்டண்ட் காட்சிகள் அமைக்க, 200 ஸ்டண்ட் வீரர்கள் நடித்தனராம்.

செம குத்து பாடல்

செம குத்து பாடல்

இப்படத்திற்காக 1 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்ட செட்டில் ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடலை சிம்பு, ரம்யா நம்பீசன் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.

இரண்டு நாயகிகளுடன் குத்து

இரண்டு நாயகிகளுடன் குத்து

இப்பாடலில் கதாநாயகன் சண்முகப் பாண்டியனுடன் இரண்டு கதாநாயகிகள் நேஹா ஹிங் மற்றும் சுப்ரா நடனம் அமைத்துள்ளனராம். மிகவும் பிரபலமான நடன இயக்குநரைக் கொண்டு இப்பாடலுக்கு நடனம் அமைத்துள்ளனராம்.

கார்த்திக் ராஜா

கார்த்திக் ராஜா

சகாப்தம்' படத்துக்கு நீண்ட நாட்களுக்குப் பின்னர் கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். அடியே ரதியே பாடல் கடந்த பொங்கல் தினத்தன்று யுடுயூப்பில் வெளியானது. ஜனவரி 31ஆம் தேதி படத்தில் ஆடியோ வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனி சக்கரை முத்தம்

சீனி சக்கரை முத்தம்

சிம்புவும், ரம்யா நம்பீசனும் இணைந்து உற்சாகமாக பாடியுள்ள குத்துப்பாடலில் கலக்கலான வரிகள் இருக்கிறது

அடியே ரதியே நீ சீனி சக்கரையா முத்தம் வைக்கிறயே... சொக்கவைக்கிறயே என்கிறார் சிம்பு....

அடடா மதனா நீ சங்கு சக்கரமா சுத்தவைக்கிறயே... நிக்கவைக்கிறயே... என்று பதில் தருகிறார் ரம்யா நம்பீசன்

மன்மதன் வாரிசு

மன்மதன் வாரிசு

ஆளான கன்னிப்புள்ள தொட்டாலும் குத்தமில்ல....

வேணா நா சின்னப்புள்ள வெவகாரம் பண்ணதில்ல...

தனியா வா சொல்லிதாறேன் அதுல நான் கெட்டிக்காரன்...

நான் தானே நான் தானே மன்மத வாரிசா வந்தேனே...

காமன் தோட்டத்து மல்லிப்பூவா அள்ளி வந்தேன்டி வர்றீயா...

ஆசை காட்டாதே எல்லாத்தையும் மூட்டை கட்டிடு போறீயா

என மாறி மாறி கேட்டுக்கொள்கின்றனர். ரசிகர்களுக்கு இந்த பாடல் பிடித்தே ஆகவேண்டும் என்று கலர்புல் மசாலாவாக படம் பிடித்துள்ளனராம்.

விஜயகாந்த்

விஜயகாந்த்

இந்தப்படத்தில் நீண்ட நாட்களுக்குப் பின் விஜயகாந்த் நடித்துள்ளார். இனிக்கும் இளமை தொடங்கி விருதகிரி வரை 125 படங்களில் நடித்துள்ளார் விஜயகாந்த். இதில் இரட்டை வேடத்திலும் நடித்துள்ளார். ஒரு சில படங்களில் இரண்டு கதாநாயகிகளுடன் டூயட் பாடியிருக்கிறார்.

மிஸ் இந்தியா கதாநாயகி

மிஸ் இந்தியா கதாநாயகி

அம்பிகா, ராதா, ரேவதி, ராதிகா, குஷ்பு, ஷோபனா, ரேகா என டூயட் பாடிய விஜயகாந்த், சிம்ரன், சுகாசினி, சுகன்யா வரை டூயட் பாடிய விஜயாகாந்த் தன் மகனுக்காக மிஸ் இந்தியாவாக தேர்வானவரை நடிக்க வைத்துள்ளார்.

முதல் படத்திலேயே

முதல் படத்திலேயே

சிலபல படங்களுக்கு பின்னர்தான் இரண்டு ஹீரோயின்களுடன் டூயட் பாட விஜயகாந்துக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் விஜயகாந்த் மகனுக்கு முதல் படத்திலேயே இரண்டு கதாநாயகிகளுடன் டூயட் பாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஏனெனில் இது விஜயகாந்தின் சொந்த படம் அல்லவா?.

English summary
Captain Vijaykanth's son Shanmugapandian will be debuting in a film titled Sagaptham, which will hit the screens in 2015. The shooting of the film is currently progressing in Malaysia. Shanmugapandian will paired with Neha Kapur who was Miss India in 2006, and Shubra Aiyappa, who is a former recipient of the Miss Bangalore tag.
Please Wait while comments are loading...