»   »  கைவிடப்பட்டதா விஜயகாந்தின் 'தமிழன் என்று சொல்'?

கைவிடப்பட்டதா விஜயகாந்தின் 'தமிழன் என்று சொல்'?

Posted By:
Subscribe to Oneindia Tamil

விஜயகாந்தும் அவர் மகன் சண்முகப் பாண்டியனும் இணைந்து நடிப்பதாக இருந்த தமிழன் என்று சொல் படம் கைவிடப்பட்டுவிட்டதாம்.

இனி சினிமாவில் நடிக்க மாட்டேன். அரசியல்தான் முழு நேரமும் என்று முடிவெடுத்து ஒதுங்கிவிட்ட விஜயகாந்தை வம்படியாக இழுத்துவந்து ஆரம்பிக்கப்பட்ட படம் தமிழன் என்று சொல்.


Vijayakanth's Tamilan Endru Sol dropped

'மொழிப் படம்... என் மூத்த பையன் வேற நடிக்க சொல்லிட்டான். அதனால் நடிக்கிறேன்' என்று கூறி படத்தின் பூஜையில் கலந்து கொண்டார் விஜயகாந்த்.


படம் ஆரம்பித்து கிட்டத்தட்ட ஒரு மாதம் வரை ஷூட்டிங்கும் நடந்த பிறகு, படத்தை நிறுத்தச் சொல்லிவிட்டார்களாம்.


ஏன்?


அது சிதம்பர ரகசியம் என்கிறார்கள். அப்படி என்னய்யா ரகசியம் என்று இறங்கி விசாரித்ததில், 'படத்துக்கு பணம் போடும் முக்கிய புள்ளி அதிமுககாரராம். அரசியலில் பரம எதிரியாக இருக்கும் விஜயகாந்த் படத்துக்கு பைனான்ஸ் பண்ணால் மேலிடம் சும்மா இருக்குமா?' என்று கிசுகிசுத்தார் தமிழன் என்று சொல் யூனிட் ஆள் ஒருவர்.

English summary
Vijayakanth's Tamilan Endru Sol movie has been dropped due to political reasons.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil