»   »  மகனை வைத்து பாகுபலி ரேஞ்சுக்கு படம்... ஹீரோயின் தமன்னா.. இது கேப்டனின் பலே திட்டம்!

மகனை வைத்து பாகுபலி ரேஞ்சுக்கு படம்... ஹீரோயின் தமன்னா.. இது கேப்டனின் பலே திட்டம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சகாப்தம் படம் மூலம் மகனை ஹீரோவாக்கிவிட்ட விஜயகாந்துக்கு அந்தப் படத்தின் ரிசல்ட்டில் அத்தனை திருப்தியில்லை. இன்னும் ஒரு அதிரடிப் படம் கொடுத்தால் ஃபீல்டில் சண்முகப் பாண்டியன் நிலைத்து நின்றுவிடுவார் என நம்புகிறார். மகனாச்சே.. அம்போன்னு விடமுடியாதல்லவா..

தமிழன் படம் எடுத்த மஜீத், இரண்டாயிரம்களில் மீண்டும் தன்னை பெரிய ரேஞ்சுக்கு கொண்டு போன வல்லரசு படம் தந்த மகராஜன் மற்றும் தலைவா இயக்குநர் விஜய் ஆகியோரிடம் கதை கேட்டுள்ளார் விஜயகாந்த்.

Vijayakanth selects a historical story to his son

இவற்றில் ஒரு கதை சரித்திரப் பின்னணி கொண்டது. அதுவும் லெமூரியாக் கண்டம் குறித்தது. பாகுபலி படம் பார்த்து அதன் பாதிப்பிலிருந்து இன்னமும் மீளாத விஜயகாந்துக்கு இந்தக் கதைதான் ரொம்பப் பிடித்துவிட்டதாம்.

இந்த லெமூரியாக் கண்டம் கதையில் சண்முகப் பாண்டியன் பண்டைத் தமிழ் மன்னனாக வருகிறாராம். அவருக்கு ஜோடி யார் தெரியுமா.. மூச்சைப்பிடித்துக் கொள்ளுங்கள், தமன்னா! (இது தமன்னாவுக்குத் தெரியுமா?).

படத்தில் சங்கத் தமிழ் புலவர் வேடம் ஒன்றுள்ளதாம். இதை விஜயகாந்த் ஏற்கப் போகிறாராம்!!

English summary
Vijayakanth has selected a historical story for his son Shanmugapandian for his next after Sagaptham.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil