துபாயில் மொபைலில் சூப்பர் ஹிட் பட பார்த்த விஜயகாந்த்... என்ன படம் தெரியுமா?

சென்னை : கேப்டன் என ரசிகர்களாலும், திரையுலகினராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்த் சமீபத்தில் மருத்துவ சிகிச்சைக்காக துபாய் சென்றார். இதனால் அவரது உடல்நிலை குறித்து அவரது லட்சக்கணக்காவ ரசக்ரகளும், கட்சி தொண்டர்களும் கவலை அடைந்தனர்.

கடந்த சில ஆண்டுகளாகவே விஜயகாந்த் உடல்நல குறைவு காரணமாக ஆக்டிவ் அரசியல் மற்றும் சினிமாவில் ஈடுபடாமல் இருந்து வருகிறார். அடிக்கடி சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது சிகிச்சைக்காக துபாய் அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

 நலமுடன் இருக்கிறேன்

நலமுடன் இருக்கிறேன்


ஆனால் தனது உடல்நிலை குறித்து ட்விட்டரில் தானே அப்டேட் வெளியிட்டுள்ளார் விஜியகாந்த். ட்விட்டர் பதிவில் தான் நல்ல உடல் நலத்துடன் உள்ளதாக ஃபோட்டோவுடன் பதிவிட்டுள்ளார். இதனால் ரசிகர்களும், தொண்டர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

படம் பார்த்த விஜயகாந்த்

படம் பார்த்த விஜயகாந்த்

விஜயகாந்த் வெளியிட்டுள்ள ஃபோட்டோவில், நர்ஸ்கள் சிலர் சுற்றி நிற்க, விஜயகாந்த் தனது மொபைல் ஃபோனில் தான் நடித்த சத்ரியன் படத்தை பார்த்ததாக விஜயகாந்த் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். கால் மேல் கால் போட்டு, ரொம்ப ஸ்டையிலாக விஜயகாந்த் அமர்ந்து சினிமா பார்க்கும் இந்த ஃபோட்டோ அனைவரையும் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

சூப்பர் ஹிட் படம்

சூப்பர் ஹிட் படம்

விஜயகாந்த் நடிப்பில் 1990 ம் ஆண்டு வெளிவந்த சூப்பர் ஹிட் படம் தான் சத்ரியன். மணிரத்னம் எழுதி, தயாரித்த இந்த படத்தை அவரிடம் உதவியாளராக இருந்த கே.சுபாஷ் இயக்கி இருந்தார். தியேட்டர்களில் தொடர்ந்து 150 நாட்கள் ஓடி, வசூல் சாதனை படைத்த படம் இது. இதில் நேர்மையான போலீஸ் அதிகாரியாக விஜயகாந்த் நடித்திருப்பார். வில்லனாக மலையாள நடிகர் திலகன் நடித்திருப்பார்.

பன்னீர்செல்வமாய் வரனும்

பன்னீர்செல்வமாய் வரனும்

ஏசிபி பன்னீர்செல்வம் என்ற கேரக்டரில் விஜயகாந்த் நடித்திருந்த இந்த படத்தின் வசனங்கள் மிகவும் பிரபலம், அதிலும், வில்லனான திலகன் பேசும், வரனும்...பழைய பன்னீர்செல்வமாய் திரும்பி வரனும் என்ற வசனம் இப்போது வரை மிக பிரபலம். பல காமெடிகளிலும் இந்த வசனம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

கேப்டன் திரும்பி வரனும்

கேப்டன் திரும்பி வரனும்

திலகன் பேசும் இந்த வசனத்தை குறிப்பிட்டே பலர் கருத்து பதிவிட்டுள்ளனர். கேப்டன்...பழைய கேப்டனா திரும்பி வரனும் என பலர் விருப்பம் தெரிவித்துள்ளனர். விஜயகாந்த்தின் இந்த பதிவை பலர் ரீட்வீட் செய்து, வைரலாக்கி வருகின்றனர். விஜயகாந்த் விரைவில் குணமடைந்து நாடு திரும்ப ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சத்ரியனுக்கு சாவேயில்லடா

சத்ரியனுக்கு சாவேயில்லடா

சத்ரியனுக்கு சாவேயில்ல டா என விஜயகாந்த் பேசும் பஞ்ச் டயலாக் படத்தின் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கும். இந்த படத்திற்கு இளையராஜா இசை அமைத்திருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X