twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆக்ஷனில் ஜாக்கி சான் எடுக்காத ரிஸ்க்கை விஜயகாந்த் எடுத்தார்...வெளிநாட்டில் நடந்த சிறப்பான சம்பவம்

    |

    சென்னை: தமிழ் சினிமாவில் சண்டைக் காட்சிகளுக்கு பேர் போனவர் மறைந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள். வாள் சண்டை, கத்திச் சண்டை, சுருள் கத்திச் சண்டை என அனைத்திலும் பெயர் பெற்றவர்.

    அவருக்கு அடுத்த தலைமுறையில் என்னதான் கமல் ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் சண்டைப் படங்களில் நடித்திருந்தாலும், முழு நீள ஆக்ஷன் ஹீரோவாக பார்க்கப்பட்டவர் நடிகர் விஜயகாந்த் அவர்கள்தான்.

    கேப்டன் பிரபாகரன், மாநகரக் காவல், உளவுத்துறை என்று அவர் நடித்த ஆக்ஷன் திரைப்படங்களை வரிசைப் படுத்திக் கொண்டே செல்லலாம்.

    ஆக்ஷன் ஹீரோ

    ஆக்ஷன் ஹீரோ

    விஜயகாந்த் பெரும்பாலும் டூப் போடாமல் சண்டைக் காட்சிகளில் நடிப்பவர். தனது 52-ஆவது வயதில் கூட கஜேந்திரா திரைப்படத்தில் கயிற்றில் தலைகீழாக கட்டி சண்டை போடும் காட்சியில் மூன்று நாட்களாக நடித்திருந்தார். நடிகர் டெல்லி கணேஷின் மகன் கதாநாயகனாக நடித்த முதல் படத்தில் ஒரு சண்டைக் காட்சியில் 10 நிமிடிங்கள் தலைகீழாக நடித்து, ஸ்டண்ட் இயக்குனரிடம் தன்னால் இதற்கு மேல் நடிக்க முடியாது என்று கூற, ஸ்டண்டி இயக்குநர் விஜயகாந்தை குறிப்பிட்டு அட்வைஸ் செய்ததாக டெல்லி கணேஷ் கூறியிருக்கிறார்.

    பேக் கிக்

    பேக் கிக்

    தமிழ் நடிகர்களில் அதிக முறை போலிஸ் வேடத்தில் நடித்தவர் என்ற பெருமை இவருக்கு உண்டு. முன்னணி நடிகர்கள் பலர் ஸ்டண்ட் செய்யும்போது உடன் நடிக்கும் நடிகர்களுக்கு அடி விழுமாம். ஆனால் விஜயகாந்த் தவறு செய்யாமல், நுணுக்கம் தெரிந்து சரியாக நடிப்பார் என்றும் கால்களை பயன்படுத்தி சண்டைக் காட்சிகளில் அதிக முறை நடித்த நடிகர் என்றும் ஸ்டண்ட் கலைஞர்கள் கூறுவார்கள். பேக் கிக் அடிப்பதில் பெயர் பெற்றவர்.

    ஜாக்கி சான்

    ஜாக்கி சான்

    உளவுத்துறை படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்ற போது டீப் வாட்டர் என்ற இடத்தில் தண்ணீருக்கு அடியில் இறங்கி சண்டை போட வேண்டுமாம். இவர் நிறத்தில் அங்கு டூப் போட ஆள் கிடைக்காததால், தானே அதில் இறங்கி நடித்தாராம். உலகப் புகழ் பெற்ற ஜாக்கி சான் கூட அதில் 10 அடி இறங்கித்தான் நடித்தார். ஆனால் இவர் அதை விட ஆழமாக இறங்கி நடித்ததாக பத்திரிக்கையாளர் செல்வம் கூறியுள்ளார்.

    டெடிக்கேஷன்

    டெடிக்கேஷன்

    பொதுவாக 50 முதல் 80 சதவிகிதம் சம்பளத்தை முன் பணமாக பெற்றுக் கொண்டுதான் முன்னணி ஹீரோக்கள் நடிக்க வருவார்களாம். ஆனால் விஜயகாந்த் முன் பணம் வாங்காமல் பல படங்களில் நடித்துள்ளார் என்றும், ரிலீஸ் சமயம் மிச்சத் தொகையை கூட விட்டுத் தருவார் எனவும் பல தயாரிப்பாளர்கள் கூறியுள்ளார்கள். தயாரிப்பாளர்களுக்கு சிரமம் தராமல் நடித்துக் கொடுக்கும் இவர் மாநகரக் காவல் பட்த்தின் ரிலீஸ் தேதியை ஏ.வி.எம் நிறுவனம் அறிவித்திருந்த நிலையில், ஷூட்டிங்கை முடிப்பதற்காக தொடர்ச்சியாக 72 மணி நடித்துக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Vijayakanth Risk in Action Sequence: கமல் ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் சண்டைப் படங்களில் நடித்திருந்தாலும், முழு நீள ஆக்ஷன் ஹீரோவாக பார்க்கப்பட்டவர் நடிகர் விஜயகாந்த் அவர்கள்தான். கேப்டன் பிரபாகரன், மாநகரக் காவல், உளவுத்துறை என்று அவர் நடித்த ஆக்ஷன் திரைப்படங்களை வரிசைப் படுத்திக் கொண்டே செல்லலாம்.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X