Don't Miss!
- Automobiles
சுஸுகியும் கோதாவுல இறங்க போகுது... ஓலாவுக்கு மட்டுமல்ல ஹீரோ விடா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கும் ஆப்பு உறுதி!
- News
இதுதான் டாடா.. A டூ Z எல்லாமே பக்கா ஸ்கெட்ச்.. மின்சார கார் சந்தையில் டாடா போடும் மெகா பிளான்
- Lifestyle
Today Rasi Palan 28 January 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் கடின உழைப்பிற்கான பலன் தேடி வரப்போகிறது...
- Finance
Budget 2023:உணவு, உரம், எரிபொருள் மீதான ,மானியங்கள் குறைக்கப்படலாம்.. அப்படி நடந்தால் என்னவாகும்?
- Sports
ஆடுகளத்தை தவறாக கணித்தோம்.. கடைசி ஓவர் எல்லாத்தையும் மாற்றிவிட்டது.. ஹர்திக் பாண்டியா பேச்சு
- Technology
நம்பமுடியாத அம்சங்களுடன் மலிவு விலையில் இறங்கிய பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!
- Travel
காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
விஜயகாந்த் போங்காட்டம் செய்து சீட்டுக்கட்டு விளையாட்டில் ஜெய்த்து என்ன செய்வார் தெரியுமா?
சென்னை: நடிகர் விஜயகாந்த் அவர்களுடைய நற்குணங்களைப் பற்றி பலரும் பகிர்ந்து வரும் செய்திகள் அனைவரும் அறிந்ததே. நடிகர் வடிவேலுவை தவிர திரைத்துறையைச் சேர்ந்த பலரும் அவரை பாராட்டுவதை மட்டுமே பார்க்க முடியும்.
உணவு விஷயத்தில் அனைவரையும் சமமாக நடத்தக் கூடியவர், தன்னை சார்ந்து இருக்கும் யாரேனும் தப்பு செய்துவிட்டால், அவர்களை உரிமையோடு அடித்து கண்டிக்கவும் செய்வாராம்.
அதே போல, ஷூட்டிங் ஸ்பாட்டில் இருப்பவர்களிடம் குறும்பு செய்வதிலும் விஜயகாந்த் தயங்கியதில்லை. அப்படி ஒரு சம்பவத்தை நடிகை வடிவுக்கரசி பகிர்ந்துள்ளார்.
ஓடும்
ரயிலை
இரவு
11.30
மணிக்கு
நிறுத்திய
விஜயகாந்த்...
சூர்யா
&
விவேக்
சொன்ன
நெகிழ்ச்சியான
சம்பவம்

அன்னை என் தெய்வம்
நடிகர் விஜயகாந்த் கதாநாயகனாக நடித்த 'அன்னை என் தெய்வம்' என்கிற படத்தை நடிகை வடிவுக்கரசிதான் தயாரித்தார். அதில் கதாநாயகியாக நடிக்க, தன்னுடைய நெருங்கிய தோழியான ராதிகாவை அனுகியுள்ளார் வடிவுக்கரசி. ஆனால் அந்தக் கருப்பனுடன் யார் நடிப்பார், உனக்கு வேறு கதாநாயகனே கிடைக்கவில்லையா என்று அதில் நடிக்க மறுத்துவிட்டாராம் ராதிகா. அதே போல் அம்மா வேடத்தில் நடிக்க நடிகை லக்ஷ்மியை அனுகியபோது, என்னை விட வயதில் மூத்தவர் அவர். அவருக்கு அம்மாவாக நடிக்க மாட்டேன் என்று மறுத்துவிட்டாராம்.

முரண்
ஆனால் அதற்கு முன்னரே நடிகை ராதிகா விஜயகாந்திற்கு ஜோடியாக நீதியின் மறுபக்கம் என்கிற படத்தில் நடித்திருப்பார். அன்னை என் தெய்வம் திரைப்படத்தை நிராகரித்திருந்தாலும், அதன் பின்னர் சில படங்களில் ஜோடியாக நடித்தார். விஜயகாந்த் அவர்களுடைய ஹேர் ஸ்டைலை மாற்றியதே நடிகை ராதிகாதானாம். அதே போல நடிகை லக்க்ஷ்மியும் விஜயகாந்தை விட மூத்த நடிகரான ரஜினிகாந்திற்கு 'நெற்றிக்கண், படையப்பா' போன்ற படங்களில் அம்மாவாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சூதாட்டம்
அன்னை என் தெய்வம் திரைப்படத்தில் இறுதியாக நடிகை மாதுரிதான் கதாநாயகியாகவும், KR விஜயா அவர்கள் அம்மாவாகவும் நடித்திருந்தனர். அந்தப் படத்தின் ஷூட்டிங்கில் பிறருடன் பந்தயம் கட்டி சீட்டுக்கட்டி விளையாடுவாராம். ஆனால் ஏற்கனவே தான் மறைத்து வைத்திருக்கும் 13 கார்டுகளை வைத்து சீட்டாட்டத்தில் ஏமாற்றி ஜெய்த்து விடுவார் என்று அப்படத்தின் தயாரிப்பாளரும் நடிகையுமான வடிவுக்கரசி கூறியுள்ளார்.

பிரியாணி விருந்து
அப்படி ஏமாற்றி ஜெய்க்கும் பணத்தில் அனைவருக்கும் பிரியாணி வாங்கிக் கொடுப்பாராம். அவருக்கு கொடுக்கும் பழக்கம் மட்டுமே இருக்கிறது. அரசியலுக்கு வரும் முன்னரே பல உதவிகளை செய்துள்ள வள்ளல் அவர். அவரை போல் யாராலும் உதவி செய்ய முடியாது. நடிகர் ரஜினிகாந்த் எளிமையானவர் என்றால், விஜயகாந்த் அண்ணன் அடிமட்ட எளிமையானவர் என்று அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார் நடிகை வடிவுக்கரசி.