»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஐந்து நடிகர்கள் தவிர மற்ற நடிகர்களுக்கு வியாபாரம் இல்லை என்று சொன்னதற்கு படஅதிபர்கள் உடனடியாக வருத்தம் தெரிவிக்கவேண்டும். இல்லாவிட்டால் அடுத்த கட்டபோராட்டம் அறிவிப்போம் என்று நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த்அறிவித்துள்ளார்.

தமிழ்த் திரைப்பட நடிகர்கள் சங்கத்திற்கும், தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் இடையேஏற்பட்டுள்ள மோதல் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

இரு தினங்களுக்கு முன்பு சென்னையில் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில்நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானம் நடிகர் சங்கத்தை கொந்தளிக்க வைத்துள்ளது.

நடிகர், நடிகைகள் சம்பளத்தைக் குறைக்கவேண்டும் என்று தீர்மானம்நிறைவேற்றினார்கள். கூடவே ரஜினிகாந்த், கமல், விஜயகாந்த், விஜய், அஜீத்குமார்தவிர மற்ற நடிகர்களுக்கு படங்களின் விற்பனையைப் பொறுத்தே சம்பளம்நிர்ணயிக்கப்படும் என்று அறிவித்திருந்திருந்தனர்.

இதனுடன் மேலும் ஐந்து தீர்மானங்களையும் தயாரிப்பாளர்கள்நிறைவேற்றியிருந்தனர். தயாரிப்பாளர்கள் கூட்டத்தைத் தொடர்ந்து நடிகர் சங்கத்தில்செவ்வாய்க்கிழமை இரவு கூட்டம் நடத்தப்பட்டது.

கூட்டத்திற்கு சங்கத் தலைவர் நடிகர் விஜயகாந்த் தலைமை தாங்கினார். இவு 10.30மணி வரை கூட்டம் நடந்தது. அதன் பிறகு நிருபர்களிடம் விஜயகாந்த் கூறியதாவது:

நடிகர் சங்கத்தின் குறுகிய கால அழைப்பை ஏற்று கூட்டத்தில் கலந்து கொண்ட நடிகர்,நடிகைகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கூட்டத்தில் பல தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டன.

5 நடிகர்கள் தவிர மற்ற நடிகர்களுக்கு வியாபாரம் இல்லை என்று தவறான செய்தியைபத்திரிக்கைகளில் வெளியிட்டதற்காக தயாரிப்பாளர்கள் சங்கம் வருத்தம் தெரிவிக்கவேண்டும்.

நாங்களும் எங்கள் விருப்பப்படி சில குறிப்பிட்ட தயாரிப்பாளர்கள் தயாரிக்கும்படத்தில் மட்டுமே நடிக்க முடியும் என்றும், படம் தயாரிக்க மாட்டோம் என்றுதயாரிப்பாளர்கள் சொன்னால், நாங்களும் படங்களில் நடிக்க முடியாது என்றும்எங்களால் சொல்லமுடியும்.

ஆனால் லட்சக்கணக்கான திரைப்படத் தொழிலாளர்களின் நலன் கருதி அவ்வாறுமுடிவு எடுக்க விரும்பவில்லை. ஆகையால் எங்கள் உணர்வுகளை புரிந்து கொண்டுபிரச்சினையை வளரவிடாமல் சுமூகமாக தீர்வு காண முயற்சி எடுக்கவேண்டும் என்றுகேட்டுக் கொள்கிறோம்.

மேற்கூறிய எங்கள் நிபந்தனைகளை நிறைவேற்றினால் திரைப்படத் துறையை சார்ந்தபிரச்சினைகளை இருதரப்பிலும் சுமூகமான முறையில் பேசித் தீர்த்துக் கொள்ளலாம்.

இந்த நிபந்தனையை உடனடியாக நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்டநடவடிக்கையை அறிவிப்போம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தலைவர் கே.ராஜன் நடிகர், நடிகைகளை தனியார் தொலைக்காட்சிகளில் வரம்பு மீறிஅவதூறாக விமர்சித்ததை வன்மையாக கண்டிக்கிறோம்.

ஐந்து நடிகர்களுக்கு மட்டும் விற்பனை கட்டுப்பாடு இல்லை என்று தயாரிப்பாளர்கள்அறிவித்திருப்பது எங்களுக்குள்ளும், எங்கள் சங்கத்திற்குள்ளும் பிளவு ஏற்படுத்தநடக்கும் முயற்சி என்றார் விஜயகாந்த்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil