»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

வரும் சட்டசபைத் தேர்தலில் எந்தக் கட்சியுடன் கூட்டணி வைப்பது என்பது குறித்து இதுவரை யாருடனும் பேசவில்லை என்று தமிழகத்தின் முதலமைச்சராகும் திட்டத்தில் இருக்கும் நடிகர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

விஜய்காந்தை தங்கள் பக்கம் இழுக்க பா.ஜ.க. முயன்று வருகிறது. அவர் அதிமுகவுடன் கைகோர்க்கவே ஆர்வமாக இருப்பதாகத்தெரிகிறது.

இந் நிலையில் தூத்துக்குடியில் தனது ரசிகர் மன்றத்தின் சார்பில் ஏழை, எளியோருக்கு திட்ட உதவிகளை வழங்கி விஜயகாந்த்பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

வரும் சட்டசபைத் தேர்தலில் எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை.இதுதொடர்பாக மாநில அளவிலோ அல்லது தேசிய அளவிலோ யாருடனும் பேசவும் இல்லை.

நான் எதைச் செய்தாலும் வெளிப்படையாகத்தான் செய்வேன். எனவே எந்தத் தலைவருடனும் நான் இதுவரை ரகசியப்பேச்சுவார்த்தை எதையும் நடத்தவில்லை.

இலங்கை கடல் பகுதிக்குள் தமிழக மீனவர்கள் அடிக்கடி, எல்லை தெரியாமல் ஊடுறுவி விடுவதால் பல்வேறு பிரச்சினைகள்ஏற்படுகின்றன. எனவே எல்லையை தெரிந்து கொள்ளும் வகையில் ஒளியூட்டிய மிதவைகளை கடலில் மிதக்க விடலாம் என்றார்விஜயகாந்த்.

தூத்துக்குடியின் முக்கியப் பகுதிகளில் ஒன்றான அண்ணா நகர் மெயின் ரோடு பகுதியில் முழுச் சாலையையும் ஆக்கிரமித்துவிஜயகாந்த் ரசிகர்கள் மேடை மற்றும் வரவேற்பு தோரணங்கள் அமைத்திருந்தனர்.

இதனால் கோவில்பட்டி, எட்டயபுரம், திருச்செந்தூர் உள்ளிட்ட ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகள் உள்ளிட்ட வாகனப்போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. உச்சி வெயிலில் அந்த வாகனங்கள் பல மணி நேரம் நிறுத்தி வைக்கப்படவேண்டிய நிலை ஏற்பட்டது.

இதனால் அந்தப் பேருந்துகளில் இருந்தவர்கள் விஜய்காந்தையும் அவரது ரசிகர்களையும் வாயார வாழ்த்தியதை கேட்கமுடிந்தது.

Read more about: finalize, tamil actor, vijaykanth

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil