»   »  அதிமுக பின்னணி இல்லை: விஜயகாந்த் அதிமுகவின் பின்பலத்தில் நான் தனிக்கட்சி தொடங்கவில்லை என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.நடிகர் விஜயகாந்த் செப்டம்பரில் மதுரையில் நடத்த உள்ள தனது ரசிகர் மன்ற மாநாட்டில் புதிய கட்சி தொடங்குவது குறித்துஅறிவிக்கவுள்ளார். முதலில் தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் கட்சி ஆரம்பிக்கப் போவதாக செய்திகள் வந்தன.இந் நிலையில் ஒரு ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ள அவர், அரசியல் கட்சியை தொடங்குவதற்காக திட்டமிட்டு நான்எனது மன்றங்களை உருவாக்கவில்லை. புதிய கட்சியின் கொள்கை, வழிமுறை, திட்டம் போன்றவற்றை மதுரை மாநாட்டில்அறிவிப்பேன்.அன்பு, அறம், ஆற்றல் ஆகியவை எனது கட்சியின் அடிப்படை தத்துவமாக இருக்கும்.அதிமுகவின் பின்பலத்தில் நான் கட்சியை தொடங்குவதாக சிலர் கூறுகின்றனர். இது தவறாகும். எந்தக் கட்சியின் பின்னாலும்போகும் திட்டம் எனக்கு இல்லை. நான் எல்லா கட்சியினருக்கும் நண்பனாகவே இருக்க விரும்புகிறேன். அதனால் தான் இதுபோன்ற வதந்திகள் கிளம்புகிறது.தமிழ்நாட்டு அரசியலில் இனி நடிகர்களுக்கு இடமில்லை என்பதை நான் ஏற்கமாட்டேன். நகர்ப்புறங்களை விடகிராமப்புறங்களில் எனக்கு எப்போதுமே ஆதரவு அதிகம். எனவே நான் அரசியலுக்கு வருவதை எனது ரசிகர்களும், மக்களும்விரும்புகின்றனர் என்று கூறியுள்ளார் விஜய்காந்த்.

அதிமுக பின்னணி இல்லை: விஜயகாந்த் அதிமுகவின் பின்பலத்தில் நான் தனிக்கட்சி தொடங்கவில்லை என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.நடிகர் விஜயகாந்த் செப்டம்பரில் மதுரையில் நடத்த உள்ள தனது ரசிகர் மன்ற மாநாட்டில் புதிய கட்சி தொடங்குவது குறித்துஅறிவிக்கவுள்ளார். முதலில் தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் கட்சி ஆரம்பிக்கப் போவதாக செய்திகள் வந்தன.இந் நிலையில் ஒரு ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ள அவர், அரசியல் கட்சியை தொடங்குவதற்காக திட்டமிட்டு நான்எனது மன்றங்களை உருவாக்கவில்லை. புதிய கட்சியின் கொள்கை, வழிமுறை, திட்டம் போன்றவற்றை மதுரை மாநாட்டில்அறிவிப்பேன்.அன்பு, அறம், ஆற்றல் ஆகியவை எனது கட்சியின் அடிப்படை தத்துவமாக இருக்கும்.அதிமுகவின் பின்பலத்தில் நான் கட்சியை தொடங்குவதாக சிலர் கூறுகின்றனர். இது தவறாகும். எந்தக் கட்சியின் பின்னாலும்போகும் திட்டம் எனக்கு இல்லை. நான் எல்லா கட்சியினருக்கும் நண்பனாகவே இருக்க விரும்புகிறேன். அதனால் தான் இதுபோன்ற வதந்திகள் கிளம்புகிறது.தமிழ்நாட்டு அரசியலில் இனி நடிகர்களுக்கு இடமில்லை என்பதை நான் ஏற்கமாட்டேன். நகர்ப்புறங்களை விடகிராமப்புறங்களில் எனக்கு எப்போதுமே ஆதரவு அதிகம். எனவே நான் அரசியலுக்கு வருவதை எனது ரசிகர்களும், மக்களும்விரும்புகின்றனர் என்று கூறியுள்ளார் விஜய்காந்த்.

Posted By:
Subscribe to Oneindia Tamil

அதிமுகவின் பின்பலத்தில் நான் தனிக்கட்சி தொடங்கவில்லை என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

நடிகர் விஜயகாந்த் செப்டம்பரில் மதுரையில் நடத்த உள்ள தனது ரசிகர் மன்ற மாநாட்டில் புதிய கட்சி தொடங்குவது குறித்துஅறிவிக்கவுள்ளார். முதலில் தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் கட்சி ஆரம்பிக்கப் போவதாக செய்திகள் வந்தன.

இந் நிலையில் ஒரு ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ள அவர், அரசியல் கட்சியை தொடங்குவதற்காக திட்டமிட்டு நான்எனது மன்றங்களை உருவாக்கவில்லை. புதிய கட்சியின் கொள்கை, வழிமுறை, திட்டம் போன்றவற்றை மதுரை மாநாட்டில்அறிவிப்பேன்.

அன்பு, அறம், ஆற்றல் ஆகியவை எனது கட்சியின் அடிப்படை தத்துவமாக இருக்கும்.

அதிமுகவின் பின்பலத்தில் நான் கட்சியை தொடங்குவதாக சிலர் கூறுகின்றனர். இது தவறாகும். எந்தக் கட்சியின் பின்னாலும்போகும் திட்டம் எனக்கு இல்லை. நான் எல்லா கட்சியினருக்கும் நண்பனாகவே இருக்க விரும்புகிறேன். அதனால் தான் இதுபோன்ற வதந்திகள் கிளம்புகிறது.

தமிழ்நாட்டு அரசியலில் இனி நடிகர்களுக்கு இடமில்லை என்பதை நான் ஏற்கமாட்டேன். நகர்ப்புறங்களை விடகிராமப்புறங்களில் எனக்கு எப்போதுமே ஆதரவு அதிகம். எனவே நான் அரசியலுக்கு வருவதை எனது ரசிகர்களும், மக்களும்விரும்புகின்றனர் என்று கூறியுள்ளார் விஜய்காந்த்.


Read more about: admk support vijayakanth

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil