twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    திரையில் கம்பீரமாக மின்னிய ”அரசியல்வாதி” விஜயக்குமார்.. நிஜத்திலும் சாதிப்பாரா?

    By Soundharya
    |

    எம்ஜிஆர் - சிவாஜி காலத்தில் நடிக்க வந்த இப்போது வரை நடித்துக் கொண்டிருக்கும் சீனியர்களில் விஜயக்குமாரும் ஒருவர். எம்.ஜி.ஆர். - சிவாஜி காலத்தில் தொடங்கி, ரஜினி - கமல் காலத்தில் பயணித்து, தற்போது விஜய், அஜித்,சூர்யா, சிம்பு என இளைஞர்கள் கொண்டாடும் ஹீரோக்களுடன் நடித்து வருகிறார்.

    இவரது மகன் அருண் விஜய் மற்றும் மருமகன் இயக்குனர் ஹரி இருவரும் திரையுலகின் பிரபலங்கள்.. விஜயகுமார் எண்ணற்ற படங்களில் நடித்திருந்தாலும் இவர் பெரும்பாலும் காவல்துறையினராகவும், எதிர்நாயகனாகவும், குணச்சித்திர வேடங்களிலுமே நடித்துள்ளார்.

    இவர் அரசியல்வாதியாக நடித்த படங்கள் என்று சல்லடையிட்டால் மிகவும் குறைந்த எண்ணிக்கையே கொண்டிருக்கின்றன. அவற்றின் வரிசையினை பார்க்கலாம்.

    அன்பு:

    அன்பு:

    2003-ம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படத்தில் விஜயகுமாருக்கு ஒரு சிறிய வேடம் என்றாலும், நல்ல அழுத்தமான எதிர்மறை கதாப்பாத்திரம். இத்திரைப்படத்தில் தான் இவர் முதல்முறையாக அரசியல்வாதியாக நடித்திருந்தார்.

    சிங்கம்

    சிங்கம்

    2010-ம் ஆண்டு இயக்குனர் ஹரி இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம். இந்த திரைப்படத்தில் மருமகன் ஹரி மாமனார் விஜயகுமாருக்கு ஒரு நல்ல அரசியல்வாதி கதாப்பாத்திரத்தை அளித்திருப்பார்.

    தவறு செய்வது தன் கட்சிக்காரனாக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுப்பதை இந்த படத்தில் தான் பார்க்க முடியும். நம் நிஜவாழ்வில் பார்ப்பது சற்றே கடினம்.

    ஒஸ்தி

    ஒஸ்தி

    2011-ம் ஆண்டு சிம்புவின் மாறுபட்ட நடிப்பில் வெளியான திரைப்படம். இத்திரைப்படத்திலும் விஜயகுமாருக்கு அரசியல்வாதி வேடம் தான். இருந்தாலும் திருப்புமுனை ஏற்படுத்தும் சிறியகதாப்பாத்திரம். இதிலும் நல்ல அரசியல்வாதியாகத்தான் நம்முன் இவர் பிரதிபலிப்பார்.

    சிங்கம் 2

    சிங்கம் 2

    2013-ம் ஆண்டு மருமகன் எடுத்த 2-ம் பாகத்திலும் ஒரு நேர்மையான அரசியல் பிரதிநிதியாகவும், ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரிக்கு உதவி செய்பவராகவும் வருவார்.

    பாஜக:

    பாஜக:

    இது படம் இல்லைங்க ... நாலே நாலு படத்துல அரசியல்வாதியா நடிச்ச விஜயகுமார் அந்த அனுபவமே போதும்னு இப்போ பாஜக கட்சியில் சேர்ந்துள்ளார். திரையில், நல்ல அரசியல் பிரமுகராக வந்தவர் நிஜ வாழ்வில் எப்படியோ..?இப்போ அரசியல் கட்சிகள்யாவும் நடிகர் நடிகைகளை பிரச்சாரத்திற்கு வச்சுதான் பிரச்சாரம் பண்ணுது. அந்த லிஸ்ட்-ல பாஜக-வும் இப்போ நடிகர் விஜயகுமாரை விட்டுவைக்கலையே...!

    ஆமா, எதுக்கு இந்த கட்சிகளாம் சினிமாவ குறிவைக்குது..?

    English summary
    The Famous Actor Vijayakumar Joins In BJP party. He acted Politician role in few Tamil movies only.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X