»   »  ரஜினி மற்றும் விஜயகாந்தை சந்தித்து பாஜகவிற்கு ஆதரவு கேட்பேன்- விஜயகுமார்

ரஜினி மற்றும் விஜயகாந்தை சந்தித்து பாஜகவிற்கு ஆதரவு கேட்பேன்- விஜயகுமார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கட்சி உத்தரவிட்டால் ரஜினி மற்றும் விஜயகாந்தை சந்தித்து ஆதரவு கேட்பேன் என்று நடிகர் விஜயகுமார் தெரிவித்திருக்கிறார்.

தமிழின் மூத்த நடிகர்களில் ஒருவரான விஜயகுமார் நேற்று பாஜக அரசியல் தலைவர்களை சந்தித்து, அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

தனது திடீர் அரசியல் பிரவேசம் குறித்து கட்சியில் சேர்ந்த பின்னர் நடிகர் விஜயகுமார் பேட்டி அளித்திருக்கிறார்.

மக்கள் நலனில்

மக்கள் நலனில்

"நான் கட்சியில் சேர்ந்ததன் அடிப்படை காரணம் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பது தான். அரசியலில் இருந்தால், மக்களுக்கு பல வழிகளில் உதவி செய்யலாம். அதனால் தான் அரசியலில் என்னை இணைத்துக் கொண்டேன்.ஊழலற்ற மற்றும் மக்களின் நலனில் அக்கறை உள்ள ஒரே கட்சி பா.ஜ.க. தான். மோடி சொன்னபடி ஊழலற்ற ஆட்சி மத்தியில் நடந்து கொண்டு இருக்கிறது. எனவே தான் பா.ஜனதாவில் என்னை இணைத்துக் கொண்டேன்.

பதவி வேண்டாம்

பதவி வேண்டாம்

நான் இங்கு எந்த பதவியையும் எதிர்பார்த்து வரவில்லை. தேர்தலில் போட்டியிடுவதில் எனக்கு விருப்பமும் இல்லை. பா.ஜ.க. வெற்றிக்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்வேன்.

பாஜக மலரும்

பாஜக மலரும்

தமிழகத்தில் பாஜகவின் ஆட்சி மலர்வது தமிழக மக்கள் அனைவருக்கும் கிடைக்கும் வெற்றியாகும். பாஜகவிற்கு ஆதரவு கேட்டு ரஜினி, விஜயகாந்தை சந்திக்கும் எண்ணம் எனக்கில்லை.ஆனால் கட்சித்தலைமை உத்தரவிட்டால் அவர்கள் இருவரையும் நான் சந்தித்து ஆதரவு கேட்பேன்.

பணத்திற்காக வாக்களிக்க

பணத்திற்காக வாக்களிக்க

என்னுடைய மகன் பாஜகவிற்கு ஆதரவு கொடுப்பாரா? என்பதை நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும்."பணத்திற்காக வாக்களிக்காதீர்கள். நமக்கு யார் நல்ல ஆட்சி தருவார்கள் என்பதனை சிந்தித்து வாக்களியுங்கள்" என்பதை வாக்காளர்களுக்கு சொல்லிக் கொள்கிறேன்" இவ்வாறு விஜயகுமார் தனது திடீர் அரசியல் பிரவேசம் குறித்து தெரிவித்திருக்கிறார்.

English summary
"Party order i will meet Rajini and Vijayakanth" veteran actor Vijayakumar says in Recent Interview.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil