»   »  சக நடிகன் வளர்ச்சியைப் பார்த்து மகிழ்பவர் அஜீத்! - விஜயகுமார்

சக நடிகன் வளர்ச்சியைப் பார்த்து மகிழ்பவர் அஜீத்! - விஜயகுமார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சக நடிகரின் வளர்ச்சியைப் பார்த்து சந்தோஷப்படுபவர் அஜீத் என்று நடிகர் விஜயகுமார் பாராட்டுத் தெரிவித்தார்.

அருண் விஜய் நடிப்பில் புதிதாக உருவாகியிருக்கும் படம் 'குற்றம் 23'. இப்படத்தை 'ஈரம்', 'வல்லினம்' ஆகிய படங்களை இயக்கிய அறிவழகன் இயக்கியுள்ளார். மகிமா நம்பியார், அபிநயா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். நடிகர் விஜயகுமாரும் இப்படத்தில் நடித்துள்ளார்.


Vijayakumar thanked Ajith Kumar

'குற்றம் 23' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. இதில் இயக்குநர்கள் கவுதம் மேனன், சசி, எஸ்.பி.ஜனநாதன், நடிகர் ஜெயம் ரவி, விஜயகுமார், பரத், ஸ்ரீகாந்த், ரியாஸ்கான், உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


அப்போது விழாவில் நடிகர் விஜயகுமார் பேசும்போது, "இயக்குநர் கவுதம் மேனனுக்கு ஸ்பெஷல் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.அருண் விஜய்க்கென்று பெரிய மார்க்கெட் இல்லாத நேரத்தில் அவரை அழைத்து 'என்னை அறிந்தால்' படத்தில் நடிக்க வைத்து அவரை இன்று அஜித் ரசிகர்கள் கொண்டாடும் அளவுக்கு உருவாக்கியதற்காக அவரை வாழ்நாள் முழுவதும் நானும், எனது மகனும் மறக்கமாட்டோம்.


அருண் விஜய் மேல் நம்பிக்கை வைத்து அஜித்தும் என்னை அறிந்தால் படத்திற்கு ஓகே சொன்னார். அதனால், அஜித்துக்கும் நான் நன்றி சொல்லியே ஆகவேண்டும். சக நடிகனின் வளர்ச்சியை கண்டு மற்ற நடிகர் சந்தோஷப்படவேண்டும். அப்படி சந்தோஷப்படுபவர்தான் அஜித், அதுதான் தல. அவருக்கு என்னுடைய நன்றிகள்," என்றார்.

English summary
Actor Vijayakumar thanked Ajith for selecting his son Arun Vijay to act in Ennai Arinthaal.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X