தொடர்ந்து கெத்துக் காட்டும் விஜயானந்த்.. ஒரு லாரியை வைத்துக் கொண்டு பெரிய சாம்ராஜ்யமே உருவாக்கியவர்!

சென்னை: கன்னட திரையுலகில் இந்த ஆண்டு அடுத்தடுத்து நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் வெளியாகி வருகின்றன.

கேஜிஎஃப் 2 மற்றும் காந்தாரா படம் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்திய நிலையில், 777 சார்லி, விக்ராந்த் ரோணா படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.

அந்த வரிசையில் கடந்த வாரம் வெளியான விஜயானந்த் திரைப்படமும் ரசிகர்களின் குட் லிஸ்ட்டில் இணைந்துள்ளது.

கலக்கும் கன்னட சினிமா

கலக்கும் கன்னட சினிமா

இந்த ஆண்டு பாலிவுட், டோலிவுட், கோலிவுட் மற்றும் மலையாள திரையுலகையே தூக்கி சாப்பிட்டு முதல் இடத்தில் உள்ளது கன்னட திரையுலகம். கேஜிஎஃப் 2 திரைப்படம் 1100 கோடிக்கும் மேல் வசூல் செய்து அசத்திய நிலையில், காந்தாரா 400 கோடியை கடந்து சாதனை படைத்தது. 777 சார்லி, விக்ராந்த் ரோணா படங்களும் வெகுவாக கவனம் ஈர்த்தன. அந்த வரிசையில் புதிய வரவாக லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்டாக இணைந்துள்ளது விஜயானந்த்.

பயோபிக் படம்

பயோபிக் படம்

பயோபிக் படம் என்றாலே சினிமா ரசிகர்களும் பொதுமக்களும் கூடுதல் எதிர்பார்ப்புடன் படத்தை பார்ப்பது வழக்கமான ஒன்று தான். ஒரே ஒரு லாரியை வைத்துக் கொண்டு 5000க்கும் அதிகமான லாரிகளுடன் லாஜிஸ்டிக்ஸ் சாம்ராஜ்யத்தையே நடத்திய கர்நாடக தொழிலதிபர் விஜய் சங்கேஸ்வரின் பயோபிக் தான் இந்த படம்.

வெற்றிநடை

வெற்றிநடை

தொடர்ந்து 5வது நாளிலும் ஒரு கோடிக்கு அதிகமாக வசூல் செய்து விஜயானந்த் திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் நல்லாவே ஓடி வருகிறது. பீரியட் படத்தை எங்கேயும் பிசிரு தட்டாமல் எழுதி இயக்கி உள்ளார் ரிஷிகா சர்மா.

நடிப்பு அபாரம்

நடிப்பு அபாரம்

VRL க்ரூப்பையே உருவாக்கிய விஜயானந்த் கதாபாத்திரத்தில் நாயகன் நிஹல் ஆர் அற்புதமாக தனது அபார நடிப்பை வெளிப்படுத்தி விஜய் சங்கேஸ்வரை திரையில் ரசிகர்களுக்காக காட்டி உள்ளார். இந்த படத்திற்கு விமர்சகர்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X