»   »  12 ஆண்டுகளுக்குப்பின் சிரஞ்சீவி படத்தில் நடிக்கும் விஜயசாந்தி?

12 ஆண்டுகளுக்குப்பின் சிரஞ்சீவி படத்தில் நடிக்கும் விஜயசாந்தி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: 12 வருடங்களுக்குப் பின் விஜயசாந்தி மீண்டும் தனது நடிப்பு பிரவேசத்தை தொடரப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ், தெலுங்கின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம்வந்த விஜயசாந்தி கடைசியாக 2004ம் ஆண்டு வெளியான 'நாயுடம்மா' படத்திற்குப் பின் நடிப்பிற்கு முழுக்குப் போட்டு முழுநேர அரசியல்வாதியாக மாறிவிட்டார்.

Vijayashanthi Special Appearance in Chiranjeevi film

இந்நிலையில் சிரஞ்சீவி நடித்து வரும் 'கத்திலண்டோடு' படத்தில், சிறப்புத் தோற்றத்தில் விஜயசாந்தியை நடிக்க வைக்க படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம்.

இப்படத்தில் நடிக்க விஜயசாந்தி சம்மதித்து விட்டதாகவும், இன்னும் அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்றும் டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சிரஞ்சீவி-விஜயசாந்தி இணைந்து ஏராளமான ஹிட் படங்களைக் கொடுத்துள்ளனர். எனினும் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக 'மெக்கானிக் அல்லுடு' படத்திற்குப் பின் இருவரும் சேர்ந்து நடிக்கவில்லை.

விஜயசாந்தி போன்றே அரசியலுக்கு சென்ற சிரஞ்சீவி 9 வருடங்களுக்குப்பின் மீண்டும் தனது நடிப்புப் பிரவேசத்தைத் தொடங்கியிருக்கிறார் என்பதால், இப்படத்தில் விஜயசாந்தி நடித்தால் கூடுதல் சிறப்பாக இருக்கும் என்று படக்குழு கருதுகிறதாம்.

'கத்திலண்டோடு' சிரஞ்சீவியின் 150 வது படமென்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Sources Said Actress Vijayashanthi Special Appearance in Chiranjeevi's 150th film.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil