For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  திரைத் துளி

  By Staff
  |

  மதுரையில் செப்டம்பர் மாதம் நடைபெறும் ரசிகர் மன்ற மாநாட்டின்போது தனது கட்சியின் பெயரை அதிகாரப்பூர்வமாகஅறிவிக்கப் போவதாக நடிகர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

  அரசியலில் குதிக்கப் போகும் விஜயகாந்த் ஊர் ஊராக சென்று மக்களின் நாடி பார்த்து வருகிறார். அப்படியே நலத் திட்டஉதவிகளையும் வழங்கி வருகிறார்.

  அந்த வகையில் ஈரோட்டில் நலத் திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சிக்கு விஜயகாந்த் ரசிகர் மன்றத்தினர் ஏற்பாடுசெய்திருந்தனர். வ.உ.சி. மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான ரசிகர்களும் பொது மக்களும் திரண்டிருந்தனர்.

  உதவிகளை வழங்கி விஜயகாந்த் பேசுகையில், அரசியல்வாதிகள் எதைச் சொன்னாலும் தலையாட்டி வந்தது போதும்,இனிமேலும் அப்படிச் செய்யாதீர்கள்.

  காமராஜர் இறக்கும்போது அவரிடம் இரண்டு சட்டைகள் மட்டுமே இருந்ததாம். காந்தி ஒரு முழத் துண்டுடன் இருந்தார்.நாட்டுக்காக உழைத்தார்.

  ஆனால் இன்றைய அரசியல்வாதிகள் மக்களுக்காக எதையும் செய்வதில்லை. தங்களது சுய நலத்தையை குறிக்கோளாக கொண்டுசெயல்படுகிறார்கள்.

  சினிமாவில் வெறுமனே கையை மட்டும் ஆட்டிச் செல்வதை நான் விரும்பவில்லை. மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் எனநினைக்கிறேன். அந்த எண்ணத்தை ஆண்டவனும் கொடுத்துள்ளான். இதுவரை பல்வேறு நலத் திட்டங்கள் மூலம் ரூ. 25 லட்சம்வரை கொடுத்துள்ளேன்.

  எனது தந்தையும் அரசியலில் இருந்தவர்தான். எனது அரசியல் வாழ்க்கையில், அரசியல் தலைவர்கள் மூலம் பல அனுபவங்கள்எனக்குக் கிடைத்தன. இவருக்கு அரசியல் தெரியுமா என்று கேட்கின்றனர். ஒரு இடத்தை நோக்கி முன்னேறி நாம் ஜெயித்தபிறகுதான் இந்த கேலியும், கிண்டலும் அடங்கும்.

  ஒரு நடிகனுக்குத்தான் தனது மக்களின் நிலையைப் பற்றி நன்கு தெரியும். ஏன் நடிகனைக் கண்டால் இவர்களுக்குப் பயம்?

  திருப்பதியை சீராக்கி அதை உருவாக்கியவர் என்.டி.ராமாராவ், மதிய உணவுத் திட்டத்தை கொண்டு வந்து சாதனை படைத்ததுஎம்.ஜி.ஆர். இருவரும் நடிகர்கள்தான்.

  செப்டம்பரில் எனது ரசிகர் மன்ற மாநில மாநாடு மதுரையில் நடக்கவுள்ளது. அதற்கு முன்பாக பல்வேறு அணிகளைஉருவாக்கவுள்ளோம். மதுரை மாநாட்டில் எனது அரசியல் கட்சியின் பெயர், கொடி அறிமுகம் செய்யப்படும்.

  அரசியலமைப்பும், தமிழக அமைப்பும் ஒரு காலத்தில் மாறும் என்றால் அதுதான் புரட்சி. அந்தப் புரட்சியை உங்களின்ஆதரவோடும், ஆண்டவனின் ஆசியோடும் நிச்சயம் செய்து முடிப்பேன். நான் ஒருமுறை மட்டும்தான் சொல்வேன் என்றார்விஜயகாந்த்.

  இதற்கிடையே விஜய்காந்தை தங்கள் பக்கமாக இழுக்கும் வேலைகளில் பாஜக தீவிரமாக இறங்கியுள்ளது. தமிழகத்தில் திமுகவும்அதிமுகவும் கைவிட்டால் சுப்பிரமணியம் சுவாமியின் நிலை தான் ஏற்படும் என்பதை உணர்ந்துள்ள பாஜக, புதிய அணியைஉருவாக்கி திராவிடக் கட்சிகளுக்கு பதிலடி கொடுக்கும் முடிவுக்கு வந்துள்ளது.

  விஜய்காந்துக்கு கூடும் கூட்டம் குறித்து டெல்லி மேலிடத்தில் எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது. இதையடுத்து கட்சி ஆரம்பிக்கும்விஜய்காந்துடன் அவருடன் கூட்டணி அமைக்கவும், அப்படியே ரஜினியின் ஆதரவைப் பெறவும் திட்டமிடப்பட்டுள்ளது.

  ஆனால், சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக திமுக கூட்டணி உடையாத பட்சத்தில் விஜய்காந்தை தங்கள் பக்கமாக இழுக்கஅதிமுகவும் முயலலாம் என்றும் கூறப்படுகிறது.

  சங்கராச்சாரியார் விஷயத்தில் அதிமுகவை மிகக் கடுமையாக விமர்சித்தாலும் பாஜக எம்எல்ஏவான ராஜா உள்ளிட்டவர்கள்ஜெயா டிவியில் சிறப்புப் பேட்டிகள் அளித்து வருகின்றனர். பாஜக செய்திகளுக்கு அதில் முக்கியத்துவமும் தரப்பட்டு வருகிறது.

  சட்டசபையில் எதிர்க் கட்சிகள் கூண்டோடு வெளியேறியபோதும் பாஜக வெளியேவில்லை. மேலும் பாஜக எம்எல்ஏக்கள்முதல்வர் ஜெயலலிதாவை மீண்டும் சட்டசபையில் பாராட்டிப் பேச ஆரம்பித்துவிட்டனர்.

  இதனால் திமுக கூட்டணிக்கு எதிராக, அதிமுக-விஜய்காந்த்-பாஜக அதிரடிக் கூட்டணி கூட உருவாகலாம் என்கிறார்கள் அரசியல்பார்வையாளர்கள்.

  Read more about: chennai party september vijaykanth
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X