»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil
நடிகர் விஜயகாந்த் அரசியலுக்கு வந்தால் அவரை வரவேற்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று பாஜக மாநிலதலைவர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

விஜயகாந்தை தங்கள் பக்கமாக இழுக்க பாஜக ரகசியமாய் பேச்சு நடத்தி வருவதை நாம் சமீபத்தில் சுட்டிக்காட்டியிருந்தோம்.

இந் நிலையில் இன்று பாஜக மாநிலத் தலைவர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் பேசுகையில்,

தமிழக சட்டசபை தேர்தலில் 3வது அணி உருவாகுமா ? அல்லது உருவாக்கப்படுமா ? என்பது தேர்தல் நெருங்கும்போது தான் தெரியும்.

பாரதீய ஜனதாவை தனிமைப்படுத்தும் முயற்சிகள் பலிக்காது. எல்லா கட்சிகளும் தனித்து நின்று போட்டியிட்டால்பாரதிய ஜனதாவும் தனித்து நிற்கும்.

நடிகர் விஜயகாந்த் மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். பல நல்ல காரியங்களைஅவர் செய்து வருகிறார். இப்படிப்பட்ட பண்பினைக் கொண்டவர்கள் அரசியலுக்கு கண்டிப்பாக வரவேண்டும்.அவர் அரசியலுக்கு வந்தால் அவரை வரவேற்க பாரதீய ஜனதா கட்சி தயாராக உள்ளது.

சுனாமி நிவாரணப் பணிகளில் முறைகேடுகள் நடந்தால் அது குறித்து அரசு விசாரணை நடத்தவேண்டும். சுனாமிபாதிப்பு ஏற்பட்ட சமயத்தில் கருணாநிதிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது திண்டுக்கல்வரை திமுக மாநாட்டிற்கு போன கருணாநிதி அப்படியே சுனாமி பாதித்த பகுதிகளுக்கும் சென்று வந்திருக்கலாம்.

ஆனால், மரம் வெட்டிய விவகாரத்தில் ஆற்காடு வீராசாமியின் தம்பி மீது குற்றம் சாட்டப்பட்டதற்காக சாலைமறியல் போராட்டத்தில் கலந்து கொள்ள சென்றிருக்கிறார் கருணாநிதி என்றார் ராதாகிருஷ்ணன்.

Read more about: bjp, chennai, vijayakanth
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil