»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரசிகர் மன்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய விஜய்காந்த் திமுக, பா.ம.கவை மறைமுகமாகப் போட்டு வாங்கினார்.

விழுப்புரம் அருகே கள்ளக்குறிச்சியில் நடந்த ரசிகர் மன்ற நிகழ்ச்சியில் நேற்று பங்கேற்ற விஜய்காந்த் பேசுகையில்,

மக்களவைத் தேர்தல் முடிந்திருக்கிறது. தேர்தலில் மாற்றி, மாற்றி மக்கள் ஓட்டு போட்டு வருகிறார்கள். ஆனால்,நாடாளுமன்றத்தில் என்ன நடக்கிறது, தினம் தினம் ரகளை தான் நடக்கிறது.

மந்திரி பதவிக்கு போட்டு போடுறார்கள். ஓட்டு போட்ட மக்களைை நினைத்துப் பார்த்தார்களா?

தேர்தலில் நிற்காமலேயே, மக்களிடம் போய் ஓட்டு கேட்காமலேயே மத்தியில் மந்திரி பதவி வாங்கிக்கொள்கிறார்கள் (பா.ம.க. நிறுவனர் ராமதாசின் மகனும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருமான அன்புமணியைநினைவில் கொள்க).

அதுவும் பணம் சம்பாதிக்கும் துறையாக, வருமானம் வரும் துறையாக கேட்டுப் பெறுவார்கள். அப்புறம் தான்ராஜ்யசபா எம்.பியாவார்கள் (அன்புமணியே தான்).

தமிழக மக்களுக்கு நன்மை செய்யணும், விவசாயிகளுக்கு உதவி செய்யணும் என வேளாண்மைத்துறையை கேட்டுவாங்கினார்களா?. காவிரி நீர் பிரச்சனை தீர, குடிநீர் பிரச்சனை தீர நீர்வளத்துறை அமைச்சர் பதவியை கேட்டுவாங்கினார்களா? (இது கப்பல், நிதித்துறை கேட்டு போராடிய திமுக மீதான தாக்குதல்)

நதி நீர் இணைப்பு என்பதெல்லாம் இன்னும் பத்து ஆண்டுகள் ஆனாலும் நடக்காது. எல்லோரும் நம்மை ஏமாற்றப்பார்க்கிறார்கள் (இது ரஜினி மீது தாக்குதல்).

ஒரு சாதிக்கு 4 கட்சிகள். நாலு தலைவர்கள். முதலில் சாதி அரசியலை புறக்கணிக்க வேண்டும். நடிகர்கள்அரசியலுக்கு வருவதில் என்ன தப்பு?

நான் அரசியலுக்கு வர வேண்டும் என்றார் மக்களுக்கு உண்மையாக நல்லது செய்யணும். ஊழலி இல்லாதஆட்சியாக தரணும். அரசியலே வேண்டாம் என்று சொல்ல மாட்டேன். ஆனால், அவசரப்பட்டு வர மாட்டேன்.நிதானமாக ஒவ்வொரு அடியும் எடுத்து வைப்பேன்.

என் மன்றத்தினரை யாரும் சாதாரணமாக நினைத்துவிடக் கூடாது. அவர்களை நான் ஒருபோதும் கைவிடமாட்டேன். அவர்கள் மிலிட்டரிக்குச் சமம். கட்டுப்பாடானவர்கள், அவர்கள் கோழைகள அல்ல, வீரர்கள். (இதுவழக்கம்போல ரசிகர்களுக்கு தரும் நம்பிக்கை டானிக்)

இவ்வாறு விஜய்காந்த் சரமாரியாக பேசினார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil