»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டடம் கட்டுவதற்காக ரூ. 2 கோடி திரட்ட கலை நிகழ்ச்சி நடத்த நடிகர் சங்கம் திட்டமிட்டுள்ளது.

நடிகர் சங்க புதிய நிர்வாகிகள் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டனர். இதைத் தொடர்ந்து தலைவர் விஜயகாந்த், பொதுச் செயலாளர்சரத்குமார் மற்றும் பிற நிர்வாகிகள் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது விஜயகாந்த் கூறுகையில், நடிகர் சங்க உறுப்பினர்களின் பிரச்சினையைத் தீர்க்கத்தான் நாங்கள் பதவிக்கு வந்துள்ளோம். இது முள்கிரீடத்தை தலையில் சூட்டிக் கொண்டது போல. இருந்தாலும் உறுப்பினர்களின் குறைகளை தீர்க்கும் கடமை எங்களுக்கு உண்டு.

முதல் வேலையாக கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யவுள்ளோம. நடிகர், நடிகைகள் இதில் கலந்து கொள்வார்கள். இதன் மூலம் ரூ. 2 கோடிதிரட்டத் திட்டமிட்டுள்ளோம். இந்த நிதியைக் கொண்டு நடிகர் சங்கத்திற்குப் புதிய கட்டடங்கள் கட்டுவோம். அதன் மூலம் சங்கத்திற்குநிரந்தர நிதி வருவாய் ஏற்படும்.

நடிக, நடிகையரின் சம்பளப் பாக்கி குறித்து தீர்வு காண தனியார் நிறுவனம் ஒன்றை நியமிக்கப் போகிறோம்.

இதேபோல, நலிவுற்ற நிலையில் இருக்கும் கலைஞர்கள் 400 பேருக்கு ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். நாடகக்கலைஞர்களின் வாரிசுகளும், இத்துறையில் இருந்து நலிவுற்ற நிலையில் காணப்பட்டால் அவர்களும் சங்கத்தில் உறுப்பினர்களாக சேர்த்துக்கொள்ளப்படுவர்.

நாடக நடிகர்களையும் சங்கத்தில் சேர்க்கும் விதமாக, சேலம் மாநகராட்சி துணை மேயரும் நாடக நடிகர் சங்கத் தலைவருமானசவுண்டப்பன், மதுரையைச் சேர்ந்த பிரசாத், புதுக்கோட்டை இசையரசன் ஆகியோர் நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

எனது பதவியை விட்டு நான் விலகும் நேரம் வரும்போது சரியான தலைமையை ஏற்படுத்தி விட்டுத்தான் செல்வேன். அடுத்த தலைவராகசரத்குமார் வரலாம். இது எனது கருத்து.

நடிகர்களின் சம்பளத்தைக் குறைப்பது குறித்து தயாரிப்பாளர்கள் கோரி வருகிறார்கள். இதுகுறித்து அவர்களுடன் பேசி முடிவு காணப்படும்என்றார் விஜயகாந்த்.

நடிகர் சங்க நிதிக்காக கலை நிகழ்ச்சி நடத்தப் போவதாக கூறிய விஜயகாந்த், சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி திரட்டுவதுகுறித்து ஏதும் பேசவில்லை.

விஜயகாந்த் தவிர சரத்குமார், நெப்போலியன், எஸ்.எஸ்.சந்திரன் மற்றும் 24 செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோரும் பதவியேற்றுக்கொண்டனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil