»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மகா நடிகன் படத்தில் சக நடிகர்களை சத்யராஜ் கிண்டல் செய்திருக்கும் செயல், மல்லாக்கப் படுத்துக் கொண்டு எச்சில் துப்புவதற்கு சமம்என்று நடிகர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

சத்யராஜ் நடித்து சமீபத்தில் வெளியான மகா நடிகன் படத்தில் அனைத்து நடிகர்களையும் தாறுமாறாக விமர்சனம் செய்துள்ளார்.ரஜினிகாந்த் போன்ற மூத்த நடிகர்கள் முதல் அஜீத், விஜய் வரையிலான இளம் நடிகர்கள் வரை ஒருவரையும் விடாமல் படுகிண்டலடித்துள்ளார்.

படத்தில் சத்யராஜால் மிகவும் ஓட்டப்பட்டது விஜய்காந்த் தான். இதனால் டென்சனாகிப் போயிருக்கிறார் விஜயகாந்த்.

இது குறித்து விஜயகாந்த் கருத்து தெரிவிக்கையில்,

தனது மகா நடிகன் படத்தில் சக நடிகர்களை சத்யராஜ் கேவலப்படுத்தி இருப்பதாக பலரும் சொன்னார்கள். ஒரு நடிகரே சக நடிகர்களைகேலி செய்வது நல்ல செயல் அல்ல. இதுபோன்று செய்வது மல்லாக்கப் படுத்துக் கொண்டு எச்சில் துப்புவதற்கு சமமானது. தனது சொந்தஅனுபவங்களைத்தான் சத்யராஜ் தனது படத்தில் கூறியிருப்பதாக நான் நினைக்கிறேன்.

தான் கேலி செய்ததை தவறாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் எனது திரையுலக நண்பர்கள் என்று சத்யராஜ் கூறியுள்ளார். நண்பர்களைகேவலமாக சித்தரிப்பதுதான் நட்பின் அடையாளமா. இவரை மற்றவர்கள் கேலி செய்தால் பொறுத்துக் கொள்வாரா?

இதுபோன்ற செயல்கள் மூலம் சினிமா கலைஞர்களிடையே ஒற்றுமை தான் சீர்குலையும் என்றார் கோபம் தெரிக்க.

இந்த விவகாரத்தை விரைவில் நடிகர் சங்கத்திலும் விஜய்காந்த் கிளப்புவார் என்று தெரிகிறது.

சந்திக்க தயார்: சத்யராஜ்

இந் நிலையில், தனக்கு வரும் எதிர்ப்புகளை சந்திக்கத் தயார் என்று சத்யராஜ் கூறியுள்ளார்.

மகாநடிகன் வசனம் யாரையேனும் புண்படுத்தினால் அவர்களை சந்தித்து மன்னிப்பு கேட்கத் தயார் என்று சத்யராஜ் ஏற்கனவேகூறியிருக்கிறார். இந் நிலையில் விஜயகாந்தின் கண்டனம் குறித்து சத்யராஜிடம் கேட்டபோது,

வரும் 20ம் தேதி சென்னையில் நிருபர்களைச் சந்தித்து விளக்கமளிக்க இருக்கிறேன். தனிப்பட்ட முறையில் எனக்கு யாரேனும் இடையூறுசெய்தால் அதை சந்திக்க தயாராகவே இருக்கிறேன் என்றார்.

சத்யராஜ் இப்போது திமுக தலைவர் கருணாநிதியின் கதை-வசனத்தில் உருவாகும் மண்ணின் மைந்தன் படப்பிற்காக காரைக்குடியில்இருக்கிறார்.

சென்னைக்குத் திரும்பியவுடன் நிருபர்களைச் சந்தித்து விஜய்காந்துக்கு பதிலடி தருவார் என்று தெரிகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil