»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் விஜயகாந்த் மீண்டும் வெற்றி பெற்று தலைவரானார். அவரதுஅணியினரும் இந்தத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றனர்.

நேற்று நடந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு விஜயகாந்த்தும், பொதுச் செயலாளர் பொறுப்புக்கு சரத்குமாரும், துணைத் தலைவர்கள்பதவிகளுக்கு நெப்போலியன், எஸ்.எஸ்.சந்திரன், பொருளாளர் பதவிக்கு காளை ஆகியோர் போட்டியிட்டனர்.

தலைவர் தேர்தலில் விஜயகாந்த்தை எதிர்த்து நடிகை தேவி போட்டியிட்டார்.

சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் முன்னிலையில் தேர்தல் நடந்தது. காலை 8 மணிக்குத் தொடங்கி மாலை 5.30மணிக்கு வாக்குப் பதிவு முடிவடைந்தது. அதன் பின்னர் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.

வாக்கு எண்ணிக்கை முடிவில் விஜயகாந்த் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவருக்கு 749 வாக்குகள் கிடைத்தன. எதிர்த்துப்போட்டியிட்ட தேவிக்கு 122 வாக்குகள் கிடைத்தன.

பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிட்ட சரத்குமார் 790 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். எதிர்த்துப் போட்டியிட்ட ராஜாவுக்கு 71வாக்குகளே கிடைத்தன. இதேபோல நெப்போலியன், எஸ்.எஸ்.சந்திரன் ஆகியோரும் வெற்றி பெற்றனர். பொருளாளர் பதவிக்கு மீண்டும்காளை தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தனது அணியின் வெற்றி குறித்து விஜயகாந்த் மகிழ்ச்சி தெரிவித்தார். அவர் கூறுகையில், நடிகர்கள் எங்கள் அணி மீது அசைக்க முடியாதநம்பிக்கை வைத்திருப்பதையே இந்த வெற்றி காட்டுகிறது.

இதற்காக அனைத்து நடிகர், நடிகையருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

24 செயற்குழு உறுப்பினர்கள் தேர்தலிலும் விஜயகாந்த் அணியைச் சேர்ந்தவர்களே வெற்றிபெற்றனர். பிரபு, குஷ்பு, ராதாரவி, ரேவதி,நாசர், மனோரமா, சத்யராஜ், சார்லி, கார்த்திக், செந்தில், விஜயக்குமார், அப்பாஸ், ஒய்.ஜி. மகேந்திரன், பசி சத்யா, அலெக்ஸ், தில்லைராஜன்,எம்.ஏ. பிரகாஷ், ஆர். வீரமணி, எல்.பி. ராஜேஸ்வரி, கே.ஆர். செல்வராஜ், ஏ.கே. ராஜேந்திரன், சி.எஸ்.பி. கண்ணன், பிரவீன்குமார்ஆகியோர் செயற்குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து சரத்குமார் கூறுகையில், விஜயகாந்த் தலைமையில் போட்டியிட்ட எங்களுக்குமகத்தான வெற்றி கிடைத்துள்ளது. சினிமா நடிகர்கள், நாடக நடிகர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் முன்பு எப்படி சேவை செய்தோமோஅதேபோல் தொடர்ந்து பணியாற்றுவோம். வாக்களித்த அனைவருக்கும் நன்றி என்று கூறினார்.


Please Wait while comments are loading...