»   »  விஜய்யின் இன்றைய நிலைமைக்குக் காரணம் இவர்தான் - டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் புகழாரம்!

விஜய்யின் இன்றைய நிலைமைக்குக் காரணம் இவர்தான் - டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் புகழாரம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
விஜய்யின் இன்றைய நிலைமைக்கு இவர்தான் காரணம் - எஸ்.ஏ.சந்திரசேகர்-வீடியோ

சென்னை : விஜயகாந்த்தின் கலையுலக வாழ்வில் 40 ஆண்டுகள் ஆனதையொட்டி நேற்று பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் விஜயகாந்த்தை வைத்து நிறைய வெற்றிப் படங்களை இயக்கிய டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் கலந்துகொண்டு பேசினார்.

"உங்களுடைய கேப்டன்.. என்னுடைய மூச்சு, உயிர்த்துடிப்பு, என்னுடைய வாழ்க்கை விஜயகாந்த். நட்புனா என்னனு கேட்டா அது விஜயகாந்த். அன்புனா என்னனு கேட்டா விஜயகாந்த். மரியாதைக்கு என்ன அர்த்தம்னு கேட்டா அது விஜயகாந்த். நன்றிக்கு என்ன அர்த்தம்னு கேட்டா அது விஜய்காந்த். மொத்தத்துல மனிதனுக்கு என்ன அர்த்தம்னு கேட்டா அது விஜயகாந்த். சாகுறவரைக்கும் வாழ்றது வாழ்க்கையில்ல.. அடுத்தவங்க மனசுல வாழ்றவரைக்கும் தான் வாழ்க்கை.

Vijaykanth is the reason for Vijays present life

என் மகன் விஜய் நடிகனாகணும்னு ஆசைப்பட்டார். நாளைய தீர்ப்பு படம் எடுத்தேன். அது சரியா ஓடலை. அடுத்து அவரை எப்படியாவது நடிகனாக்கிறணும்னு நெனைச்சேன். விஜயகாந்த்தோடு சேர்ந்து நடிச்சா அவர் நடிகனாகிருவார்ங்கிற ஆசையில் விஜயகாந்த்துக்கு போன் பண்ணினேன். எங்க இருக்கிறீங்க விஜி.. ஒரு அஞ்சு நிமிஷத்துல வீட்டுக்கு வரேன்னு சொன்னேன். ரெண்டு நிமிஷத்துல அவர் என் வீட்டுக்கு வந்துட்டார்.

என்னுடைய மகன் விஜய் ஆசைப்பட்டான். அது சரியாப் போகலை. உங்ககூட ஒரு படம் நடிக்கவைக்கணும்னு சொன்னதுமே எப்ப சார்னு கேட்டார். படம், டேட், கதை சொல்லணும்னு யார் சொன்னாலும் இப்ராஹிமை பாருங்கனு சொல்வார். ஆனா, எனக்கு மட்டும் அப்படிச் சொன்னதே இல்லை. 'செந்தூரப்பாண்டி' படத்துல நடிக்க கேட்டதும், ஒரு பைசா சம்பளம் வேண்டாம் படத்தை முடிங்க பார்த்துக்கலாம்னு சொன்னார்.

விஜய்யோட சேர்ந்து நடிச்சார். அந்தப் படம் ஹிட்டாச்சு. விஜய்யின் இன்றைய வாழ்க்கைக்கு அஸ்திவாரம் போட்டதில் விஜயகாந்த்துக்கு பெரிய பங்கு இருக்கு. தன்னிடம் உதவியாளரா வந்து சேர்ந்து பிறகு டிரைவரா வேலை பார்த்த சுப்பையாவுக்காக 'பெரியண்ணா' படம் பண்ணிக் கொடுத்தார். அடுத்தவங்களுக்காகவே வாழ்ற மனுசன் விஜயகாந்த். நான் 80-களில் எப்படிப் பார்த்தேனோ அதே விஜயகாந்த்தை தான் இப்போதும் பார்க்கிறேன்." எனப் பேசினார்.

"விஜயகாந்த் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள். இது உங்களுக்கு முற்றுப்புள்ளி அல்ல. நானும் நீங்களும் அடுத்த வருசம் சேர்ந்து ஒரு படம் பண்றோம். இவர்தான் தயாரிப்பாளர் என கலைப்புலி எஸ்.தாணுவைக் குறிப்பிட்டுக் கூறினார் எஸ்.ஏ.சந்திரசேகர். இந்த அறிவிப்பு தொண்டர்களுக்கு, திரையுலகினருக்கும் உற்சாகம் தரும் விதமாக அமைந்தது.

English summary
"Vijayakanth has a big role in foundation of vijay's present life" says S.A.Chandrasekar.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X